சின்ன விஷயங்களின் கடவுள்
அருந்ததிராய்
இருபத்தொரு வருடங்களுக்கு முன் நவீன உலக இலக்கியத்துக்கு அருந்ததி ராய் அளித்த இந்தியக் கொடை இந்நாவல்.
பழைமைவாதத்திலும் சாதியின் ஆதிக்கத்திலும் மூழ்கியிருந்த கேரள மண்ணில் கம்யூனிசம் காலூன்றத் தொடங்கியிருந்த காலகட்டம். கவித்துவமான மொழியில் கனவுத்தன்மை கூடிய நடையில் கால ஓட்டத்தின் முன்னும் பின்னுமாக நாவல் விரிந்து செல்கிறது. குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற உலகம் சிதைக்கப்படுகிறது. சாதியின் கொடுங்கரங்களால் அப்பாவியின் உயிரும் தனிமைக்கொண்ட இதயத்தின் காதலும் நொறுங்குகின்றன. சுயநலத்திலும் பொறாமையிலும் மனித உறவுகள் அர்த்தம் இழந்து போகின்றன. கருமுட்டைகளிலிருந்து ஒன்றாகப் பிறந்த எஸ்தா, ராஹேலின் வாழ்க்கைகள் என்றென்றைக்கும் திரும்ப முடியாதபடி வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்படுகின்றன.
உலகெங்கும் வாசகர்களால் மிகவும் நேசிக்கப்படுகிற, திரும்பத்திரும்ப வாசிப்பில் திளைக்க வைக்கிற நாவல்களில் ஒன்றான இது தனது ரசிக்கக்கூடிய மாய உலகிற்குள் ஒவ்வொரு நாளும் புதிய வாசகர்களை ஈர்த்து வருகிறது.
Reviews
There are no reviews yet.