computerilum cellphonilum kalakkalam tamilil
கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், டேப்லெட் என அனைத்து நவீன தொழில்நுட்பக் கருவிகளிலும் ஆங்கிலம் போலவே தமிழையும் பயன்படுத்த முடியும். ஆனால் இப்படித் தமிழைப் பயன்படுத்துவது எப்படி என்பது பலருக்குத் தெரிவதில்லை. இதனால் சிலர் தமிழையே ஆங்கிலத்தில் டைப் செய்து செய்திகளாகவும் தகவல்களாகவும் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், இதைப் படிப்பவர்கள் தவறாக அர்த்தம் புரிந்துகொள்ளும் அபாயமும் இருக்கிறது. இன்னும் சிலர் ஆங்கிலமே அறியாதவர்களாக இருப்பதால், நவீன தொழில்நுட்பத்தின் இதுபோன்ற சௌகரியங்களைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள். இவர்களுக்காகவே இந்த நூல் வெளியாகிறது.
சிக்கலான கம்ப்யூட்டர் கட்டளைகளையும்கூட, பள்ளி மாணவர்களுக்கும் புரியும் விதமாக எளிய தமிழில் தந்திருக்கிறார் காம்கேர் கே.புவனேஸ்வரி. ஒவ்வொரு கட்டளையும் ஸ்டெப் பை ஸ்டெப்பாக ஸ்கிரீன் ஷாட் படங்களோடு விவரிக்கப்பட்டு இருப்பது, இந்த நூலின் கூடுதல் சிறப்பு. கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்களில் பெரிய நிபுணத்துவம் இல்லாதவர்கள்கூட, இந்த நூலைப் படித்து எளிதாகத் தமிழுக்கு மாறிவிட முடியும். தமிழ் எழுத்துரு எனப்படும் ஃபான்ட்கள், அவற்றை டைப் செய்வதற்கான கீபோர்ட் செட்டப் என எல்லா அடிப்படைத் தகவல்களும் இதில் உள்ளன.

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 5)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-15)
இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
கற்போம் பெரியாரியம்
கீதையின் மறுபக்கம்
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர் 
Reviews
There are no reviews yet.