1 review for திராவிட இயக்கப் பெருமக்கள்
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..

____
₹200.00 Original price was: ₹200.00.₹185.00Current price is: ₹185.00.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
Nagarajan.P –
இது என்னுரை 53.
*********************
திராவிட இயக்கப் பெருமக்கள் – அறிஞர் அண்ணா – சீதை பதிப்பகம் வெளியீடு.
● தென்னாட்டின் பெர்னாட்ஷா என புகழ்பெற்ற பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரின் முதல் மாணவர். ஈரோட்டு பாசறையிலிருந்து வெளி வந்த பேராற்றல் மிக்க தலைவர்களில் முதலானவர். எல்லோராலும் பாராட்டப்பட்டவர். எல்லோரையும் பாராட்டியவர்.
பிறரை அன்பால் பாராட்டினார்.
பிறரின் அன்பை பாராட்டினார்.
தன்னை வசையால் துளைத்தவர்களை – வாழ்க வசவாளர்கள் என்றார், அந்த நெசவாளர்களின் காஞ்சித் தலைவன்.
● அறிஞர் அண்ணா, பல்வேறு சமயங்களில் – தனது எழுத்துக்களில், பேச்சுக்களில், தம்பிக்கு மடல்களில், இரங்கற் பாக்களில், மணிவிழாக்களில், பொதுக் கூட்டங்களில், மாநாடுகளில் திராவிட இயக்கத்திற்காக பாடுபட்ட இயக்க முன்னோடிகளை பாராட்டியுள்ளார். அந்த செய்திகளையெல்லாம் சேகரித்து ஒரு நல்ல புத்தகமாக தந்ததே இந்த நூல். 37 திராவிட இயக்க பெருமக்கள் பற்றி அண்ணாவின்
கருத்துகள் இதில் பதிவாகி உள்ளது.
அவைகளில் சில – அண்ணாவின் மொழியில் ——–
● சர்.பிட்டி. தியாகராயர் – திராவிட இயக்கத்துக்குப் புத்துயிர் அளித்த பூமான் ! அவர் களத்திலே தூவிய விதை இன்று நன்றாக வளர்ந்திருக்கிறது.
● டாக்டர் டி.எம். நாயர் – திராவிட இன உணர்ச்சி தமிழகத்திலே பரவுவதற்கு வித்தூன்றியவர். ஒரு மாபெரும் புரட்சித்தந்தை !
● தந்தை பெரியார் – யார் யாரை தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுபவர்.
சிறைக்கு செல்ல வேண்டுமென்றாலும், இன்முகத்தோடு செல்லும் பிடிவாதக்காரர்.
நான் அறிந்த தலைவர், தெரிந்த தலைவர் இவர் ஒருவர் தான் ! அதே காரணத்தினால் தான் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு கூட தலைவரை ஏற்படுத்தவில்லை. எனது ஒரே தலைவர் பெரியார் தான் !
● டாக்டர் சி. நடேசனார் – வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்னும் கொள்கைக்கு என்றே உயிர் வாழ்ந்தவர்.
● சர். ஏ.டி. பன்னீர் செல்வம் – வானுலகில் வசிக்கும் வாய் வேதாந்தி அல்லர் அவர் ! செய்தி ஞானத்துடன் உலக அனுபவம் பெற்றவர்.
● மா. சிங்கார வேலர் – இந்திய துணைகண்டத்தின் முதல் பொதுவுடைமை வாதி.
● சர். பி.டி. ராஜன் – நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது அமைச்சராக இருந்து மிகுந்த திறத்துடன் நிர்வாகத்தை நடத்தினார்.
● பட்டுக்கோட்டை அழகிரிசாமி – அறியாமையை அகற்ற அஞ்சா நெஞ்சுடன் அவனி சுற்றி வந்த ஆண்மையாளன். பகுத்தறிவு பாசறையின் படைத்தலைவன் !
● குத்தாசி குருசாமி – குருட்டு நம்பிக்கைகளை தாக்குவதிலே ஒரு தனிச்சுவை. இலட்சியத்தை எப்படியும் வெற்றி பெறச் செய்தாக வேண்டும் என்பதிலே தனியாத ஆர்வம் கொண்டவர்.
● பன் மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் – தமிழ் வாழ வேண்டும், தமிழ் வளர வேண்டும் என்ற குறிப்பிட்ட கொள்கை வட்டத்தில் நின்று தொண்டாற்றியவர். அவரது நூல்களில், தென்னாட்டு போர்க்களங்கள், என்னை மிகவும் கவர்ந்த ஒன்று !
● நாவலர் இரா. நெடுஞ்செழியன் – ஓயாது உழைப்பது, எப்போதும், எங்கேயும் எதையாவது செய்து கொண்டே இருப்பது. அது தான் நாவலர்.
● பேராசிரியர் க. அன்பழகன் – அவர் பேச்சில் கனிவு இருக்கும், குழைவு இருக்காது. தெளிவு இருக்கும், தொய்வு இருக்காது.
திருக்குறள் ஆராய்ச்சியாளர், தெளிவுரையாளர்.
● கலைஞர் மு.கருணாநிதி – ஒரு நாளைக்கு கருணாநிதி எத்தனை மணிநேரம் தூங்குகிறார் என்பதை அறிவது சிரமம். அவர் இத்தகைய திறமையை பெற்றதன் அடிப்படை – உழைப்பு என்பதை உணருவார்கள். உழைக்காமல் இந்த திறமை வந்து விடவில்லை. தம்பி கருணாநிதியின் வெற்றிக்கு இது தான் காரணம்.
● புரட்சி நடிகர் எம்ஜி ராமச்சந்திரன் – சமுதாயத்தில் துன்பப்படுகிறவன் எங்கே இருக்கிறான் என்று தேடிப் போய், அவன் கண்ணீரைத் துடைத்துக் கை கொடுக்கின்ற எம்ஜிஆர், வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல்.
● உவமைக்கவிஞர் சுரதா – வார்த்தைக்கு புதுப் பொருளை தருவதில் அவரைப் போன்ற தமிழ் கவிஞர்களைப் போல், மற்ற மொழிக் கவிஞர்கள் யாரும் கையாளுவதில்லை. அறிந்த பொருளைக் காரணம் காட்டி – சான்று கூட்டி, உவமை நயத்தோடு செய்வது தமிழ் கவிதை. இந்த வகையில் சிறந்து நிற்பவர் சுரதா !
● அறிஞர் அண்ணா, திராவிட இயக்க பெருமக்கள் 37 பேர்கள் பற்றிய தனது கருத்துக்களை வெளியிடப்பட்ட செய்திகளிலிருந்து – 14 பெருமக்கள் பற்றிய மிகச்சிறிய குறிப்புகளையே அறிமுகமாக தந்துள்ளேன்.
விவரமாக அறிய புத்தகத்தை வாசியுங்கள் !
அதன் கருத்துக்களை யோசியுங்கள் !
பொ.நாகராஜன். சென்னை.
10.07.2021.
*************************************