இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 பா.ஜ.க. வும் - இந்துத்வாவும்
பா.ஜ.க. வும் - இந்துத்வாவும்						 புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை						 Antartica: Profits of Discovery
Antartica: Profits of Discovery						 ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்						 ஆலிஸின் அற்புத உலகம்
ஆலிஸின் அற்புத உலகம்						 நீதிக் கதைகள்
நீதிக் கதைகள்						 அவரை வாசு என்றே அழைக்கலாம்
அவரை வாசு என்றே அழைக்கலாம்						 பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)						 அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்						 கற்றுக்கொடுக்கிறது மரம்
கற்றுக்கொடுக்கிறது மரம்						 காமம்+ காதல்+ கடவுள்
காமம்+ காதல்+ கடவுள்						 அந்தக் காலம் மலையேறிப்போனது
அந்தக் காலம் மலையேறிப்போனது						 கோரா
கோரா						 திருவாசகம் மூலமும் உரையும்
திருவாசகம் மூலமும் உரையும்						 ட்வின்ஸ்
ட்வின்ஸ்						 தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்						 மரபும் புதுமையும் பித்தமும்
மரபும் புதுமையும் பித்தமும்						 தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்						 முதல் ஆசிரியர்
முதல் ஆசிரியர்						 பார்த்திபன் கனவு
பார்த்திபன் கனவு						 லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி						 இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்						 ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்						 கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)						 பிரதமன்
பிரதமன்						 நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்						 சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்						 ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்						 தவளைகளை அடிக்காதீர்கள்
தவளைகளை அடிக்காதீர்கள்						 பச்சைக் கனவு
பச்சைக் கனவு						 அருளாளர்களின் அமுத மொழிகள்
அருளாளர்களின் அமுத மொழிகள்						 சண்டிதாசரின் காதல் கவிதைகள்
சண்டிதாசரின் காதல் கவிதைகள்						 புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்						 பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்						 சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா						 தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்						


Reviews
There are no reviews yet.