சுதந்திர இந்தியாவில், தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி) அவர்களுக்கான உயிர்ச் சிலையாக இந்தப் , ‘புத்தகம் எழுந்து நிற்கிறது. பழுத்த ஆத்திகர், தூய்மையான காங்கிரஸ்காரர், சரியான இந்திய விடுதலைப் போராளி, காந்தியின் பக்தரான அவரை பிராமண துவேஷி, வகுப்பு துவேஷி, கருப்புச் சட்டை அணியாத ஈ.வே.ரா, என்று ! சொல்லி காங்கிரஸ்காரர்கள், தேசிய பத்திரிகைகள் பட்டம் சூட்டி பதவியில் இருந்து இறக்கினார்கள்: – ‘அரசியலைவிட்டே துரத்தினார்கள். கதர் சட்டை மனிதருக்குக் காவலுக்கு இருந்தது கருப்புச் ‘சட்டைகள். அந்த வரலாற்றைச் சொல்கிறது, இந்தப் புத்தகம்.
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
Publisher: பரிசல் புத்தக நிலையம் Author: ப. திருமாவேலன்Original price was: ₹140.00.₹130.00Current price is: ₹130.00.
காமராஜருக்கு முன்பே திராவிட இயக்கத்தால் தீவிரமாக ஆதரிக்கப்பட்ட காங்கிரஸ் முதல்வர், ஓமந்தூர் ராமசாமி. இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதாலும், ஆலய நிர்வாகங்களில் அரசின் கண்காணிப்பை வலுப்படுத்தியதாலும் உள்கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகளைச் சந்தித்த அவர், உள்கட்சிப் போட்டியில் தோல்வியடைந்து, முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. தீவிர காந்தியராகவும் பழுத்த ஆன்மீகவாதியாகவும் விளங்கிய ஓமந்தூராரை ஆதரித்து, 1948 ஏப்ரலில் ‘திராவிட நாடு’ இதழில் அண்ணா எழுதிய இரண்டு தலையங்கங்கள் வகுப்பு துவேஷத்தைத் தூண்டிவிடுவதாய்க் குற்றஞ்சாட்டப்பட்டு ரூ.3,000 பிணை கோரப்பட்டது. அந்த இரண்டு தலையங்கங்களை முன்வைத்து, ஓமந்தூராரின் உயரிய அரசியல் வாழ்க்கையையும், அன்றைய காங்கிரஸ் குழுச் சண்டைகளையும், அவற்றின் பின்னாலிருந்த நோக்கங்களையும் விளக்கியிருக்கிறார் பத்திரிகையாளர் ப.திருமாவேலன்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.