GOOD TOUCOH BAD TUUCH
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய விரும்பும் ஒவ்வொரு பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இந்நூல் ஒரு கையேடு. எந்த வயதிலிருந்து ‘குட் டச்… பேட் டச்…’ சொல்லித் தரலாம்? எப்படிச் சொல்லித் தருவது? இதெல்லாம் நமக்கு நம் பெற்றோர் சொல்லித் தரவில்லையே? நாமெல்லாம் வளரவில்லையா? இதுபோன்ற கேள்விகள் எழுவது வழக்கம்தான்.
உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களும், தம் வாழ்வை அழகாக, ரசனையாக வாழ உரிமை படைத்தவை. அவர்களில் குழந்தைகள் இன்னும் சிறப்புச் சலுகைகள் கொண்டவர்கள். ஏதோ சில பாதகர்களால் அவர்களின் குழந்தைமை அழியவும், வாழ்நாள் முழுதும் கூட்டுக்குள் முடங்கவும் தேவையில்லை. ‘பாதகம் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு… அவர்கள் முகத்தில் உமிழ்ந்துவிடு’ என்று பாரதி கூறிய அறிவுரை இன்று மட்டுமல்ல… இனி எப்போதும் குழந்தைகளுக்கு நாம் கற்றுத் தரவேண்டிய முக்கிய பாடம்!
சுற்றம், சூழலில் ஏற்படும் பிரச்னைகளை ஒரு குழந்தையானது எப்படிக் கையாள வேண்டும் என அறிவுறுத்துவது பெற்றோரின் கடமையே. அந்த வகையில் இந்த நூலுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. எது நல்ல தொடுதல் என அறிமுகப்படுத்தும், ‘குட் டச் பேட் டச்’ கருத்தாக்கத்தில் தொடங்கி, டீன் ஏஜ் குழப்பங்கள், பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள் என பலவும் இந்நூலில் அறிவியல்பூர்வமாக அணுகப்பட்டுள்ளன.
‘குங்குமம் தோழி’ மாதம் இருமுறை இதழில் கட்டுரைத் தொடராக வெளிவந்தபோதே மிகுந்த வரவேற்பைப் பெற்ற இது, இப்போது நூல் வடிவம் பெறுகிறது.

மாபெரும் தமிழ்க் கனவு 
Reviews
There are no reviews yet.