ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம்:
வளமிக்கக் குடும்பத்தில், பலமானவனாக பிறந்தவன் அல்ல ஹிட்லர். தாயின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இறைபக்தியுடன் நல்லொழுக்கம் போதிக்கப்பட்டு வளர்ந்த சாதாரணச் சிறுவன்தான். படிப்பிலும் கெட்டி அல்ல. தலைசிறந்த ஓவியனாக உருவாக வேண்டும் என்ற மென்மையான லட்சியத்துடன் வளர்ந்த இயல்பான இளைஞனே. ஆனால், ஒரு கட்டத்தில் தூரிகையைத் தூக்கிக் கடாசிவிட்டு, துப்பாக்கியை நம்பி, ரத்தம் தொட்டு குரூரங்களைக் காட்சிப்படுத்தும் கொடுங்கோலனாக மாறியிருக்கிறான் எனில் அது எந்த மாதிரியான சூழ்நிலை? என்ன மாதிரியான மனநிலை? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இப்புத்தகம்.
Lakshi –
எழுத்தாளர் முகில் எழுதிய நூல்களில் இதுவும் மிக முக்கியமான ஒன்று. ஹிட்லர் பற்றி நான் நிறைய நூல்கள் வாசித்துள்ளேன். அவற்றில் இருந்து இந்நூல் மிகவும் மாறுபடுகிறது. நன்றி முகில்.. புத்தகத்தை ஆர்டர் செய்ததும் உடனடியாக அனுப்பி வைத்த bookmybook.in பணியாளர்களுக்கு மிக்க நன்றி.!