1 review for இதுதான் ராமராஜ்யம்
Add a review
You must be logged in to post a review.
₹25.00
ராம ராஜ்ய ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைந்தபோது ஏற்பட்ட எதிர்ப்பு குறித்துச் சரியான புரிதல் இன்றி, அவர்கள் மதத்தை அவர்கள் பரப்பக்கூடாதா என்று சிலர் கேட்டனர். ராம ராஜ்யம் என்பது வெறும் ஆன்மீகப் பரப்புரை அன்று, அது ஓர் அரசியல் முழக்கம். ராம ராஜ்யம் ஏற்படுமானால் அது எப்படி இருக்கும் என்பதை விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இப்போது அது காலத்தின் பெரும் தேவையாக உருவெடுத்துள்ளது.
சங் பரிவாரத்தின் முதன்மையான நோக்கமே, ‘பாரத வர்ஷத்தில் ராம ராஜ்யத்தை’ அமைப்பதுதான். அவர்களின் முதல் எதிரியான காந்தியாரின் வேட்கையும் ராமராஜ்யத்தை உருவாக்குவதுதான். எனவே ராமராஜ்யம் என்பது, இரு துருவங்களின் ஒரு கனவு.
எனவே, அந்த ராமராஜ்யம் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள நமக்கு ஆவல் ஏற்பட்டது. அந்த ஆசையைக் கம்பராமாயணம் நிறைவேற்றாது. இராமன் முடிசூடி, எல்லோர்க்கும் பரிசுகளை நல்குவதோடு கம்பராமாயணம் முடிந்துவிடுகிறது.
மௌலி (மகுடம்) புனைந்தப்பின் இராமன் எவ்வாறு ஆட்சி நடத்தினான் என்னும் செய்திகள் கம்பர் நூலில் இல்லை.
பாலகாண்டம் தொடங்கி, உத்தரகாண்டம் வரை ஏழு காண்டங்களை வால்மீகி ராமாயணம் கொண்டிருக்க, கம்பரோ, ஆறாவது காண்டமான யுத்த காண்டத்தோடு, தன் காப்பியத்தை நிறைவு செய்துவிட்டார். ஏழாவது காண்டத்தை ஏன் தமிழிலே படைக்கவில்லை என்பது தெரியவில்லை.
ஆதலால், ராமராஜ்யம் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், வால்மீகியின் உத்தரகாண்டத்தையோ, அதைத் தமிழில் ஆக்கியிருக்கின்ற ஒட்டக்கூத்தரின் படைப்பையோ படிக்க வேண்டும். வழிநூலைக் காட்டிலும், மூல நூலிலிருந்தே செய்திகளைத் தொகுக்கலாம் என்று தோன்றியது…
வால்மீகி எழுதிய உத்திரகாண்டத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு எங்கும் கிடைக்கவில்லை. அதனை வெளியிட்ட ‘தி லிட்டில் பிளவர்’ பதிப்பகத்திலேயே அது இல்லை.
ஆனால், அங்குதான் ஒரு செய்தி கிடைத்தது. 1963 ஆம் ஆண்டிற்குப் பிறகு, உத்தரகாண்டத்தை மறுபதிப்புச் செய்வதில்லை என்பதே அச்செய்தி. ஏன் என்று கேட்டோம். ‘’உத்தரகாண்டம் படிப்பது குடும்பத்துக்கு நல்லதில்லேன்னு பெரியவா சொல்லிட்டா’’ என்றார்கள்.
பொதுவாகவே, நம்மவர்களிடம் படிக்கும் பழக்கம் குறைந்துகொண்டு வருகிறது. இதில் ‘குடும்பத்துக்கு நல்லதில்லை’ என்று வேறு சொல்லிவிட்டால், பிறகு யார் படிக்கப் போகிறார்கள்.
ஒன்று மட்டும் புரிந்தது, அந்த நூல் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது.
நேராகப் பெரியார் திடல் நூலகத்திற்குச் சென்றோம். அடடா, பலரது உரைகளோடு உத்தரகாண்டம் அங்கே பத்திரமாக இருந்தது. பண்டித இ.மு. சுப்பிரமணிய பிள்ளை (சந்திரசேகரப் பாவலர்) எழுதிய, ‘இராமயண ஆராய்ச்சி – உத்தரகாண்டம்’ என்னும் நூலும் கிடைத்தது.
படி எடுத்து வந்து, மொத்த உத்தரகாண்டத்தையும் படித்தபோது, தலை சுற்றியது. பொருளற்ற, ஆபாசமான பல புராணக் கதைகள் நிரம்பி வழிந்தன. அந்நூலைப் படிப்பது குடும்பத்திற்கு நல்லதோ இல்லையோ, மூளைக்கு நல்லதில்லை என்று புரிந்தது.
படித்து முடித்தபோதுதான், ஏன் அதை மறைக்கின்றனர் என்பது தெளிவானது.
அந்நூலிலிருந்து சில துளிகளை மட்டும் இங்கு எடுத்து தந்துள்ளேன். படியுங்கள் ராமராஜ்யம் எப்படிப் பட்டதென்று எல்லோருக்கும் புரியும். (சுப.வீரபாண்டியன், நூல் முன்னுரையில்…)
நன்றி – வினவு
Delivery: Items will be delivered within 2-7 days
Chindhan –
ஆம் இதுதான் ராமராஜ்ஜியம்