காலம்

Publisher:
Author:

Original price was: ₹425.00.Current price is: ₹400.00.

காலம்

Original price was: ₹425.00.Current price is: ₹400.00.

சேதுவுக்கு எப்பவும் ஒரே ஒரு ஆள் மேல மட்டும்தான் ஆசை. அது சேது மேல மட்டும்தான்! . . .” நாவலின் இறுதிப்பக்கத்தில் நாயகன் சேதுவின் பால்யகால காதலி சுமித்ரா அவனிடமே கூறும் சொற்கள் இவை. இதுவே சேதுவை முன்னிருத்தி நாவல் மேற்கொள்ளும் நீள, அகல, ஆழ காலப்பிராயணத்தை அறிந்து கொள்ள பேரளவு துணைபுரியக்கூடியதாகும். எதிலும் மனம் ஊன்றாத மானுடர்கள்  ‘தப்பித்து’, ‘தப்பித்து’ கடைசியில் சென்று நிற்கும் புள்ளி எதுவென அறியத்தரும் நாவலும் கூட. ‘மூக்குபொடி’ வாங்க சொற்பக் காசு இல்லாமல் அறைக்குள் சென்று முடங்குபவனே ‘ சேது முதலாளி’ ஆகும் கதை. வேலை கேட்டு தந்தையோடு குறுகி நின்று அவமானப்பட்டுத் திரும்பிய சேதுவின் வாசலில் பின்னொரு காலத்தில்  ஊர்மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பணி வேண்டி காத்திருப்பதன் கதை. பெண்களை தற்காலிக இளைப்பாறுதலுக்கும் இயலாமைகளின் சமன்படுத்தலுக்கும்  உபயோகிப்பவனின் கதை.

கேரள நவீனத்துவ இலக்கிய முகங்களுள்  ஒருவரான எம்.டி.வாசுதேவன் நாயரின் நடை அழகும்  உபபாத்திரத்தை மட்டுமல்ல சிறிய அளவில் வரக்கூடியவர்களைக்  கூட  முழுமை அளித்து தீட்டிக் காட்டும் சித்தரிப்புகளின் துல்லியமும்  தமிழுக்கு வேண்டியன. போலவே கூர் குன்றாத கத்தி போன்ற உரையாடல்களும்.

மலையாள இலக்கியத்தின் வலுவான ஆக்கங்களைத் தொடர்ந்து மொழிபெயர்த்து வரும் குளச்சல்.மு. யூசுப் இந்தப் படைப்பையும் குந்தகம் நேராத உயிரோட்டமான நடையில்  தமிழாக்கி இருக்கிறார்.

Delivery: Items will be delivered within 2-7 days