1 review for காதுகள்
Add a review
You must be logged in to post a review.
₹190.00
எம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
-பிரபஞ்சன்
Delivery: Items will be delivered within 2-7 days
Luxshaya –
எனக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு ஏதாவது ஒரு புத்தகம் படித்துக் கொண்டு இருக்கும் போது அதில் அவர்கள் குறிப்பிடும் புத்தகங்களை கையேடில் குறித்து வைத்து கொள்வேன்..!!அப்படி தான் இந்த புத்தகமும் பரிட்சயம்..!!
நா.முத்துக்குமார் இன் “வேடிக்கை பார்ப்பவன்” புத்தகத்தில் ஒரு தடவை அவர் குட்டிப் பையனாக வே மாறிவிடுவார்.அவர் பயந்து விட்டு யாரிடமோ தொலைப்பேசியில் கேட்கும் போது அவர் கேட்பார் சமீபகாலமாக எம்.வி புத்தகங்கள் ஏதாவது படித்தீர்களா என்று கேட்பார்.?
அதற்கு அவர் ஆமா “காதுகள்” வாசிச்சேன் னு சொல்லுவார். அது அவர் எம்.வி புத்தகங்களுடைய தாக்கம் தான் செரியாகிடும் என்று சொல்லி வைத்து விடுவார்.
எம்.வி யின் நாவல்களே உளவியலை உச்சம் தொடும் நாவல்கள் தான்.(அதுக்குன்னு நான் அவரு எல்லா புத்தகங்களையும் படித்தது இல்லை ஒரு மாதஇதழில் படித்திருக்கிறேன்)அப்படி நா.மு வின் புத்தகத்தில் குறிப்பிட்ட “காதுகள்” தான் எனக்கு இதனை படிக்க வைத்த ஒரு obsession என்றே சொல்லலாம்.இதை படித்தர்வகளின் தாக்கம் வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் எழுந்து விட்டே போகிறது.. உடனேவோ,அல்லது சில வருடங்கள் கழித்து கூட!!!
1993 இல் சித்தப்பிரம்மையை(schizophrenia) இலக்கியத்தில் அவ்வளவு விரிவாக உணர வைத்த நாவல்!!அதும் அவருக்கு நடந்ததையே இவ்வளவு மீள் யோசித்து எழுத முடியுமா?என்னும் திகைப்பு சற்று பதரத்ததான் செய்கிறது.
இதை நான் படித்தது ஒரு 6 மாதங்களுக்கு முன்பு. படிக்கும் போது பெரிதாக மாற்றம் ஒன்னும் தெரிந்ததில்லை நான் தனியாக இருக்கும் நேரங்களில் தான் என்னால் உணர முடிந்தது.என் காதுக்குள்ளும் சில ஒலிகள் கூக்குரலிட்டு தான் இருந்தது.அதை கடந்து வந்தது ஒரு பெரும் பாடு!!
ஒருவருக்கு மனநிலை பாதிக்கப் பட்டால் சாதரணமாக “பைத்தியம்” என்று சொல்லிவிட்டு கடந்து செல்ல தான் செய்வோம்.ஆனால்,உளவியலாகப் அது பார்க்கையில் தான் அது எவ்வளவு கொடியது என்று இந்த நாவல் படிக்கும் போது தான் உணர்ந்தேன்!!
வாசிப்பாலும் இலக்கியதாலும் மட்டுமே ஒரு உணர்வை அனுபவித்தமாறியே புகுத்த முடியும்!!அப்படி பார்க்கையில் படித்து முடிக்கும் போது எனக்கும் schizophrenia வந்தது போல் உணர்ந்தது தான் மிச்சம்!! இதை சிலர் magical realism, auditory hallucinations நாவல் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இன்று நண்பர் ஒருவர் சாகித்திய அகாடமி நூல்கள் ல என்ன படிச்சிருக்க..? என்று கேட்டார்
“காதுகள்” என்றேன்!!
அட அதுக்கும் எனக்கும் நெறய தொடர்பு இருக்கு என்று அவர் சொல்ல magical realism தான் போல என்று நினைத்து கொண்டே திகைத்தேன்(சிரிக்கவும் செஞ்சேன்)!!!
இன்று எம்.வி யின் நூற்றண்டு தினமாம் என்ன ஒரு coincidence ல!!