தமிழகத்தில் வாழ வழியற்று, தென் கிழக்காசிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் நம்பிக்கையைப் புரட்டிப்போட்ட உலகப் போர் பின்புலத்தில் ப.சிங்காரம் சொல்லியுள்ள கதையான கடலுக்கு அப்பால் நாவல், புதிய பிரதேசங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘மனிதனால் தாங்கமுடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம் எதையும் இழப்பதில்லை’ என்ற தேறுதலுடன் முடியும் நாவலின் இறுதி வரிகள்தான் ப.சிங்காரம் சொல்ல விழைவதா? யோசிக்க வேண்டியுள்ளது.
கடலுக்கு அப்பால்
Publisher: நற்றிணை பதிப்பகம் Author: ப. சிங்காரம்
₹150.00 Original price was: ₹150.00.₹140.00Current price is: ₹140.00.
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ப. சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. ‘கடலுக்கு அப்பால்’ நாவலில் கடவுளின் புன்சிரிப்பும், புயலிலே ஒரு தோணியில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றன. கடலுக்கு அப்பால் பெறுமதியான ஒரு நாவல். அதிலிருந்து சகல பரிமாணங்களிலும் விரிந்து பரந்து விகாசம் பெற்றிருக்கும் மகத்தான படைப்பு.
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: VC 269
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, இலக்கியம் / Literature, நாவல் / Novel
Tags: நற்றிணை பதிப்பகம், நாவல், ப. சிங்காரம்
Description
Reviews (0)
Be the first to review “கடலுக்கு அப்பால்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.