KODAI MAZHAYIN MUDHAL THULIGAL
இலங்கையின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் சுதாராஜ். கடந்த சுமார் நாற்பது ஆண்டுகால ஈழத்து வாழ்வின் அசைவியக்கத்தை, அதன் வரலாற்றுத் திருப்பங்களை, தனிமனித வாழ்வில், மன உணர்வுகளில் அவை ஏற்படுத்திய தாக்கங்களைத் தன் கதைகளில் அவர் பதிவுசெய்திருக்கிறார். இந்தப் பதிவுகள் உணர்வு சார்ந்த, அனுபவம் சார்ந்த பதிவுகளாக அமைகின்றன. அவற்றில் பொதிந்திருக்கும் அரசியலும் அழகியலும் அவரை சமூகப் பொறுப்புடைய ஒரு கலைஞராக இனங்காட்டுகின்றன என்பதை அவரது படைப்புகளை வாசிக்கும் போது நம்மால் உணர முடியும்.
20 கதைகளை தாங்கிய சுதாராஜின் ‘கோடை மழையின் முதல் துளிகள்’ என்னும் இச் சிறுகதைத் தொகுப்பு மீண்டும் பல்வேறு உணர்வலைகளை ஏற்படுத்துகிற தொகுப்பாக அமைகின்றது.
-பேராசிரியர் மணிகோ. பன்னீர்செல்வம்
Reviews
There are no reviews yet.