லெனின் : வாழ்வும் சிந்தனையும்
அருணன்
முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் வேறு சிலரும் லெனினின் வாழ்வை சித்தரிக்கத்தான் செய்திருக்கிறார்கள்..
நான் செய்திருப்பது என்னவென்றால் 33 பாகங்களாக உள்ள அவரின் எழுத்துக்கள் பலவற்றையும் படித்து பயன்படுத்தியிருப்பது, முக்கியமான அனைத்து நூல்களையும் அறிமுகப்படுத்தியிருப்பது. அதே சமயத்தில், அவரின் வீரஞ்செறிந்த வாழ்வின் சுவை குன்றாமல் பல நிகழ்வுகளையும் அப்படியே விவரித்திருப்பது.
இதற்கு அவரைப் பற்றிய சமகாலத்தவரின் நினைவுகள் பெரிதும் பயன்பட்டன. சமுதாயச் சிற்பியை எழுத்துலுகச் சிற்பியாகவும் ஒருங்கே சித்தரித்ததால் நூல் பெரிதாகிப் போனது.
மார்க்சியம் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் இன்றைய காலத்தில், லெனின் உருவாக்கிய சோவியத் ஒன்றியம் சிதைந்து போயிருக்கும் இந்தச் சூழலில் அவரைப் பற்றி மட்டுமல்லாது, அவரது சிந்தனைகளையும் அறிவது ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டின், ஒவ்வொரு இடதுசாரியின் கடமையாகும்.
இளைஞர்கள் மத்தியில் பேசியபோது அவர்களின் பணியை “கற்க” எனும் ஒற்றைச் சொல்லில் சுருக்கிச் சொன்னார் லெனின்.
சித்தாந்தத்தைப் பொறுத்தவரை நாம் எல்லோருமே இளைஞர்கள்தாம். அனைவருக்குமானது அந்த மந்திரச் சொல்.
– கற்க
Reviews
There are no reviews yet.