Madhuvandhi
இந்நாவலின் உள்ளிருந்து….
கடவுள் ஒருநாள் எழுந்தார். அழகின் கோடி துளிகளை ஒரு கோப்பையில் ஏந்தினார். உலகில் உள்ள அனைவர்மீதும் அந்தத் துளிகளைத் தெளிப்பதற்காக விண்ணில் பறந்தார். கோப்பை கைத்தவறி கடவுளின் கையிலிருந்து நழுவி விழ…அழகின் அத்தனைத் துளிகளும் மதுவந்தியின் கண்களில் விழுந்தது.
————————————————————————————————————————————————————–
இங்க ஒவ்வொரு பொண்ணுக்கும் ரெண்டு வாழ்க்கை இருக்கு. ஒண்ணு…வெளில சமூகத்துக்காக வாழுறது. இன்னொரு வாழ்க்கை மனசுக்குள்ள இருக்கும். அந்த வாழ்க்கையை அவங்க கடைசி வரைக்கும், உள்ளுக்குள்ளயே வாழ்ந்துட்டு செத்து போயிடணும்
————————————————————————————————————————————————————–
ஜோசியர் சொன்னாரு. எனக்கு இது நாலாவது ஜென்மமாம். ஒரு விஷயம் சொல்றேன்..வெளியே யார்கிட்டேயும் சொல்லிக்காதீங்க.” என்று சொன்ன சரவணன் நிவேதாவின் அருகில் மெதுவாக, “நான் போன ஜென்மத்துல எம்.ஜி.ஆராக இருந்தேனாம். இப்பவும் எம்.ஜி.ஆர்.சமாதி, ராமாவரம் தோட்டம் எல்லாம் போனா உடம்பு ஒரு மாதிரி சிலிர்த்திடுது.உங்களுக்கு இது எத்தனாவது ஜென்மங்க?” என்றான் வெகுளியாக. “ம்…ரெண்டாவது ஜென்மம்” என்றாள் அவள் கடுப்பாக.
“நீங்களும் விசாரிச்சிட்டிங்களா? போன ஜென்மத்துல நீங்க யாரா இருந்திங்களாம்?”
“ம்…சிலுக்கு ஸ்மிதாவா இருந்தேன்.”
“அதாருங்க சிலுக்கு? நல்லி குப்புசாமி மாதிரி எதாச்சும் பட்டுப் புடவை பிசினஸா?” சரவணனின் வெகுளித்தனத்தை ரசித்த நிவேதா,” உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு விருப்பப்படறேன்.” என்றாள்.”ஆ…” அலறிய சரவணன், “அய்யய்யோ…இவ்ளோ அழகா இருக்கற பொண்ணுல்லாம் நமக்கு கட்டுப்படியாவாதுங்க…நான் எங்க ஊர்ல சாதாரணமா பாத்துக்குறேன்.” என்றான்.”யோவ்…” என்று சரவணனைப் பிடித்து இழுத்து அவனது உதட்டில் இரண்டு நிமிடம் முத்தமிட்ட நிவேதா, “ ஐ லவ் யூ. இப்ப என்ன சொல்றீங்க?” என்றாள். “கல்யாணம் பண்ணா தினம் இந்த மாதிரி பண்ணுவீங்களா? என்றான்.
“வேற வேலை?”
முதல் பார்வையில் ஒருவன் கண்ணுக்குள் தேவதையாக விழுந்தவர்கள், எத்தனை வயதானாலும் தேவதையாகவே இருக்கிறார்கள்.

சஞ்சாரம்
Carry on, but remember!
One Hundred Sangam - Love Poems 
Reviews
There are no reviews yet.