Manase Relax Please (Part – 2)
அதெப்படி… எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?’ விகடனில் ‘மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’ தொடரை சுவாமி சுகபோதானந்தா துவங்கியதிலிருந்தே வாரந்தோறும் வாசகர்களிடமிருந்து வியப்புடன் எங்களுக்குக் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கும். ‘ஆமாம் சுவாமிஜி… எங்களுக்கும்தான் இது புரியவில்லை! அதெப்படி… இருக்கிற இடத்திலிருந்தே வாசகர்களின் மனங்களைப் படித்துவிட்டு, உங்களால் அத்தியாயங்களை எழுத முடிகிறது?’ என்று சுவாமி சுகபோதானந்தாவிடமே நாங்கள் ஒரு முறை கேட்டோம். ‘இது மிகச் சுலபம்! அன்றாடம் நேரிலும் தொலைபேசியிலும் தபால் மூலமும் இ_மெயில் மூலமும் எத்தனையோ பேர் என்னிடம் தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தில், பணியிடத்தில், நண்பர்களிடத்தில் எதிர்கொள்ளும் சங்கடங்களை என்னிடத்தில் சொல்லி, தீர்வு கேட்கிறார்கள். நானும் சொல்கிறேன்! என்னிடத்திலே பத்துப் பேர் வைக்கின்ற சொந்த வாழ்க்கைச் சிக்கல்கள்தான், பல்லாயிரக்கணக்கானவர்களின் பிரச்னையாக இருக்கிறது. அதைத்தான் நான் தொடர்ந்து எழுதுகிறேன்’ என்றார்.

தாமஸ் வந்தார்
வேதபுரத்தார்க்கு
மனுசங்க
வயது வந்தவர்களுக்கு மட்டும்
மிச்சக் கதைகள் 
Reviews
There are no reviews yet.