‘நக்சலைட் இயக்கம் – நிழலும் வெளிச்சமும் ‘
“எம்.எல். கட்சிகள், மக்களுக்கு அரசியல் கற்றுத் தருவதில்லை’ என, அவ்வப்போது, அக்கட்சிகளின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கூறுகின்றனர். அவர்கள் கற்பிக்காமல் இல்லை, கற்பிக்கிறார்கள். ஆனால் ஒரு வரம்புகுட்ப்பட்ட அரசியலை கற்பிக்கிறார்கள். இந்த உலகில் சுரண்டுபவர்கள் இருக்கிறார்கள், சுரண்டப்படும் மக்கள் இருக்கிறார்கள். அனைத்து கட்சிகளும் சுரண்டும் வர்க்கத்தின் கட்சிகள், ஆனால் ‘அண்ணன்கள்’ மட்டுமே மக்களின் மனிதர்கள். சுரண்டுபவர்களுக்கு துணையாக போலிஸ் துப்பாக்கி இருக்கும் போது, மக்களுக்கு துணையாக அண்ணன்கள் துப்பாக்கி இருக்கிறது. இந்த துப்பாக்கி அந்த துப்பாக்கியை வெற்றி கொள்ளும்போது மக்கள் ராஜ்ஜியம் உருவாகும். இதுதான் எம்.எல். கட்சிகள் பிரதானமாக கற்பிக்கும் அரசியல். இதுவும் ஒரு அரசியல்தான், மறுக்க முடியாது. இது சரியா தவறா என்ற கேள்வியை கடந்து, இதற்கு மட்டுமே வரம்புகுட்ப்படுத்தப்பட்ட பகுப்பாய்வில் பல விஷயங்களுக்கு இடமில்லை என்பது நிதர்சனமான உண்மை. இதைத் தங்கள் அரசியலின் மையக் கருவாகத் தேர்ந்தெடுத்தாலும், அதைச் சுற்றி இன்னும் பல விஷயங்களைச் சேர்த்து கூற வேண்டி இருக்கும். அப்போது (வரம்புகுட்பட்டாவது) பா.ஜ.க. போன்ற அரசியல் சக்தியை ஏன் குறிப்பாக எதிர்க்க வேண்டும் என்று சொல்ல முடியும். ஆனால் சுரண்டுபவர்கள் – மக்கள், அந்த துப்பாக்கி இந்த துப்பாக்கி எனும் ஆரம்ப நிலை விஷயங்களுக்கு வரம்புகுட்பட்ட பகுப்பாய்வில் இந்துத்துவாவை ஏன் எதிர்க்க வேண்டும், சிறுபான்மையினரைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும், மதசார்பின்மையை ஏன் ஆதரிக்க வேண்டும் ஆகியவை விளக்கிக் கூறுவதற்கான இடம் இருக்காது. இந்த குறையின் தாக்கம் கடந்த தேர்தலில் கண்கூடாக தெரிந்தது.

சஞ்சாரம்
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
Dictionary of Accountancy and Commerce
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
My big book of ABC
ஸ்ரீ சுகர் ஜீவநாடி அற்புதங்கள்
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி 
![நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]](https://bookmybook.in/wp-content/uploads/2023/12/நீர்வழிப்-படூஉம்-1-93x100.jpg)

Reviews
There are no reviews yet.