NEGILIKOL
பிளாஸ்டிக் மாசுபாடு என்பது உலகளாவிய பிரச்சினை. பிளாஸ்டிக் பொருட்கள் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும்தான் இம்மாசுபாட்டைக் குறைக்க நாம் எடுக்கக்கூடிய முதல் படி. பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, சுற்றுச்சூழலில் இதன் தாக்கம், இம்மாசுபாட்டால் உண்டாகும் சமூக, பொருளாதார, சுகாதார விளைவுகள், தீர்வுகள் ஆகியவற்றை அறிவியல்பூர்வமாக இந்த நூல் எடுத்துரைக்கிறது.நம்முடைய அன்றாடப் பழக்கவழக்கங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் இம்மாசுபாட்டைக் குறைக்க முடியும் என இந்நூல் வலியுறுத்துகிறது. அதற்கான வழிகளையும் முன்வைக்கிறது.பொதுமக்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர் இம்மாசுபாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்.இந்நூல், பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த சர்வதேச ஆய்வறிக்கைகள், பிளாஸ்டிக் தொடர்பான நூல்கள், ஐபிசிசி, ஐநா நிறுவனங்களின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான மொழியில் தொகுக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.