1 review for ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.
Or Ilakkiyavathiyin Kaliyulaga Anubavangal
எனது சமுதாய வாழ்க்கை பிரித்துக்கொண்டு நான் எழுத ஆரம்பித்ததின் முதற்கூறு, அரசியல் அனுபவங்களை மூன்று கூறுகளாகப் அனுபவங்கள் என்ற தலைப்பிலும் இரண்டாவது கூறு, கலை உலக அனுபவங்கள் என்ற தலைப்பிலும் மூன்றாவதும் கூறு, பத்திரிகை உலக அனுபவங்கள் என்ற தலைப்பிலும் எழுதிவருகிறேன். இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவத்தின் முதற்பாகமே ஆகும்.
Delivery: Items will be delivered within 2-7 days
ART Nagarajan –
ஓர் இலக்கியவாதியின்
கலையுலக அனுபவங்கள்
ஜெயகாந்தன்
தேன்மொழி பதிப்பகம்.
மரியாதைக்குரிய எழுத்தாளர், கலைமாமணி,
எனது நண்பர் திரைப்பட நடிகர், திரு.”ராஜேஷ்”அவர்கள்.
அவரிடம் இருந்த நூலை படிஎடுத்து எனக்கு வழங்கி என்னைதேர்ந்த வாசகனாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்ட எனது நண்பர். திரு ராஜேஷ் அவர்களுக்கு
வாசகனாக எனது
நன்றிகளும், பேரன்பும்.
ஒரு சமூக மாற்றத்திற்கு அர்ப்பணித்துக் கொள்ளாத கலையும், அரசியலும் சாக்கடையாகிப் போகும்.
ஒரு சமூக மாற்றத்தை
தழுவி நிற்கிற ஒருவன், மாற்றமுறாத சமூகத்தில் போராடிக்கொண்டு தான்
இருக்க வேண்டுமே தவிர ஒன்றும் சாதித்துவிட முடியாது.
அப்படிச் சாதிப்பதாக நினைப்பது
சிந்தனையும், உலக அறிவும் கொண்டவனுக்கு பொருந்தாது என்கிறார் இந்த நாலில் ஜெயகாந்தன்.
தன் முரட்டுத்தனமான கோபத்தை
தானே சுயவிமர்சனம் செய்து கொள்வது ஜெயகாந்தனிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்.
சில நேரங்களில் தனக்கு வந்த கோபத்தை எண்ணியெண்ணி வாழ்நாள் முழுவதும் வருந்தியிருக்ககிறார் ஜே.கே.
தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொன்னதற்காக ஒரு தமிழ்ப் பேராசிரியரை நடுத்தெருவில் வைத்து அடித்திருக்கிறேன் என்கிறார்.
கலையுலக தொடர்புகளில்
கவிஞர் தமிழ் ஒளி, விந்தன், வசனகர்த்தா இளங்கோவன்,
தோழர்கள். கே.முத்தையா, ஜீவா, இயக்குனர்.பீம்சிங், நாகேஷ், சந்திரபாபு,ஸ்ரீகாந்த், திருச்சி மோதி, மற்றும் கவிஞர் கண்ணதாசன் போன்றவர்களோடு நெருங்கிப் பழகுவதிலும், விலகிக் கொள்வதிலும், தனக்கென ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டார் ஜே.கே.
தனது சில நேரங்களில்
சில மனிதர்கள் கதையை திரைப்படமாக்க பலபேர் முனைந்தாலும் அவர் பீம்சிங் அவர்களுக்கே உரிமையை தந்தார். திரைக்கதையை ஜே.கே உருவாக்கியது படம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
கம்யூனிஸ இயக்கங்களில், அதன் கொள்கைகளில், மிகுந்த ஈடுபாட்டுடன் சேர்ந்து தனது கலைப்பயணத்தை துவங்கிய ஜே.கே. இயக்கங்களில் உள்ள
தனி மனிதர்கள் மீதுள்ள விமர்சனங்களில் உள்ள கோபத்தில் விலகிச் சென்றாலும், கொள்கைகளை விமர்சனம் செய்யத் தவறவில்லை.
தானெடுப்பதே சிறந்த முடிவு என்றிருந்த ஜே.கே.
தனது இறுதிக் காலங்களில், கண்ணதாசன் சங்கரமடம் சென்று திரும்பிய பின்
அர்த்தமுள்ள இந்து மதம் எழுதியது போலவே,
தானும்
“ஜெய ஜெய சங்கர” எழுதிக்கொண்டார். அதை ஞாயப் படுத்திக்கொண்டார்
ஜே.கே.
ஒரு மனிதனின் கோபம்
தனது வாழ்நாளில்
எத்தனை விசித்திரங்களை ஏற்படுத்தும் என்பதையும்,
நம்மை சுற்றியுள்ள
சக மனிதர்களின் மனம் எப்படிப்பட்டதாக உள்ளது என்பதை தனது சுய விமர்சனத்தோடு
தோலுரித்து காட்டியிருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு.
வாசியுங்கள்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART. நாகராஜன்
வாசகர் வட்டம் மதுரை
9894049160.
14.04.2020.