அறிஞர் அண்ணா டெல்லியிலிருந்து திரும்பி சென்னையில் கழகத் தோழர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த பொழுது, டெல்லியில் ராஜாராம் எனக்கு பிக்கானீர் மகாராஜா, ஜெய்ப்பூர் மகாராஜா, காஷ்மீர் மகாராஜா, என்று பல ராஜக்களை என்னிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். அத்தனை ராஜாக்களும் நண்பர்களாக இருந்தாலும் அவன் என் தலைமையை ஏற்றுக் கொண்டிருப்பது தான் மகிழ்ச்சி என்று கூறினார்.
சேலத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வழங்கியதற்காக நடைபெற்ற பாராட்டு கூட்டத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேசிய பொழுது, நேற்றையதினம் பெரியவர்களெல்லாம் என்னைப் பாராட்டியிருக்கிறார்கள். எட்டு எட்டரை மணி வரை அங்கே கவியரங்கம் நடந்திருக்கிறது. கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள், போற்றியிருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் எங்கள் கட்சி அல்ல. ஆகவே தான் இந்த நிலைமையை உருவாக்கிய கழகக் கருவூலம் ராஜாராமைக் கண்டு இதுவரையில் நான் பயந்ததில்லை. இன்று முதல் நான் பயப்படுகின்றேன்.
தமிழகத்து அரசியல் நடவடிக்கைகளை நான் என் இரு கண்களால் பார்க்கிறேன். ஒன்று திருர இரா. செழியன். மற்றொன்று திரு. க.இராசாராம். – ஜெயப்பிரகாஷ் நாராயண்

மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
வெற்றிக்கு சில புத்தகங்கள் - பாகம் 4 
Reviews
There are no reviews yet.