Paravaiyin Vasanai
கமலா தாஸ் அனுபவத்தின் ஊற்றுக்கண்களைத் தேடிச்சென்ற எழுத்தாளர். திரைகளை அகற்றியபோது கண்ட வாழ்க்கையின் உள்ளொளியைப் பதிவுசெய்வதில் அவர் காட்டிய ஆன்மீகம் சார்ந்த நேர்மையால் மலையாள இலக்கியத்தைக் கடந்து அவரது குரல் இந்திய இலக்கியத்திலும் கவனத்தைப் பெற்றது. பெண்மையின் அகப்படாத ரகசிய வியப்புகளை வெளிப்படுத்தும் பலவித முகங்கள் அவரது கதைகளில் துளித்துளியாக நிறைந்துள்ளன. அதிலொன்று பணிவு, அடுத்தது கருணை, வேறொன்று துயரம், மற்றது விலைமகளுக்கானது. இசை, காதல், அன்பு ஆகியவற்றை ஸ்பரிசிக்கப்படாத அனுபவமாக வழங்கும் இக்கதைகள் வாசக மனதைக் களங்கமின்மையால் நிர்வாணப்படுத்துகின்றன. நவீன காலகட்டத்தின் ஆண் பெண் உறவில் கலந்த முரண்களின் விவரிப்புகளே இவரின் கதைகள். கலை, தத்துவ உலகில் சுற்றிப் பிணைக்கப்பட்ட மரபுகளுக்கு அறைகூவல் விடுத்தன கமலா தாஸின் கதைகள். 1953முதல் 1984வரை அவர் எழுதிய நூற்றி நாற்பது கதைகளிலிருந்து படைப்பெழுச்சியின் உச்சத்தைத் தொட்ட தேர்ந்தெடுத்த பதினாறு சிறுகதைகளின் தொகுப்பு இது.
– நிர்மால்யா

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
2800 + Physics Quiz
21 ம் விளிம்பு
Compact DICTIONARY Spl Edition
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
A Madras Mystery
சுலோசனா சதி
அனுபவமே வாழ்வின் வெற்றி
ஏகாதிபத்திய பண்பாடு
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் அங்கம், மச்சம், முடி, நிறம் சொல்லும் குணங்கள்! 
Reviews
There are no reviews yet.