மாதவனின் கதையுலகம் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த கதாப்பாத்திரங்களின் மனச்சலனத்திலிருந்து உற்பத்தியாகும் சொற்களால் ஆனவை. கத்தி மீது நடப்பது மாதிரி கதைகள் மீது நடக்கிறார். பூனை இந்தப் பக்கம் தாவுமா! அந்தப் பக்கம் தாவுமா! என்றெல்லாம் நீங்கள் கணிக்க முடியாது. சொற்களை கலைத்துப் போட்டு விளையாடுகிற ஆட்டம் இது. அதில், நேர்த்தி என்பது தேன்கூடு வடிவம் மாதிரி. மாதவனுக்கு ‘ராணி தேனீ ‘க்களை கவரத் தெரிந்திருக்கிறது. அந்த வித்தையை, இந்தக் கதைகளை வாசிக்கும்போது உணர்வீர்கள். வேறுவேறுவிதங்களில் அவர் எழுதியிருக்கும் இக்கதைகளுக்குள் எறும்புகள் சிறுகதை தனித்துவமானது. மாதவனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு பிறழ்.
-கார்த்திக் புகழேந்தி

வருங்கால தமிழகம் யாருக்கு? 


Reviews
There are no reviews yet.