Saamaniyanin Mugam
திருநெல்வேலி வட்டார வழக்கின் தனித்துவத்தை எழுத்து வழியாகத் தமிழ்நாடெங்கும் எடுத்துச் சென்றவர் சுகா. வட்டார வழக்கின் இனிமையை எழுத்து எந்த வகையிலும் சிதைத்துவிடக் கூடாது என்பதில் அதீத கவனம் கொண்டவர். பேச்சு வழக்கின் இனிமை என்பதன் இயல்பான ஒலியில் இருக்கிறது என்பதைத் தன் ஒவ்வொரு கட்டுரையிலும் சுகா அழுத்தமாகச் சொல்லி இருப்பதை, இந்த நூலில் உள்ள கட்டுரைகளில் மட்டுமல்ல, அவரது எந்த ஒரு கட்டுரையிலும் காணலாம். இன்னும் சொல்லப் போனால் அவரது எழுத்தின் அடிநாதமே இதுதான். சுகா மிகச் சிறந்த கதை சொல்லி. நல்ல பாரம்பரியமான உணவைத் தேடிச் செல்லும்போதும் சரி, தன் நட்புகளைப் பற்றிச் சொல்லும்போதும் சரி, அவர்களுள் உயர்ந்தவர் சாதாரணமானவர் என்கிற பாகுபாடின்றி உரிமையுடன் நகைச்சுவையாகப் பேசும்போதும் சரி, எல்லாவற்றையும் அவர் ஒரு கதைத்தன்மையுடன் சொல்வதை அவதானிக்கலாம். அதேசமயம் அந்தக் கதையில் எவ்விதச் செயற்கைத்தன்மை புகுந்துவிடக்கூடாது என்பதில் அவர் கொள்ளும் அக்கறையையும் கவனிக்கலாம். இயல்பான நகைச்சுவையே சுகாவின் மணிமகுடம். ஆனால், நமக்குத் தெரியாத நிலமொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளைப் போல, எங்கே எப்போது ஒற்றை வரி தெறித்து நம் உறக்கத்தைக் குலைக்கும் என்பதைச் சொல்லிவிட முடியாது. சுகாவின் ஒவ்வொரு கட்டுரையையும் நம்மை ஊன்றி வாசிக்கச் செய்பவை, சுவாரஸ்யமும் நகைச்சுவையும் திடுக்கிடலும் கலந்த இந்த எழுத்து முறைதான். தாமிரபரணியைப் போலவே வற்றாத ஊற்றாக சுகாவின் எழுத்து முழுக்க இவற்றை நாம் பார்க்கலாம்.

மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
மாயவரம்: சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்
மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்
மாயக்கன்னி
கார்மெலின்
நினைவில் நின்றவை
பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்
சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்
கள்ளிக்காட்டு இதிகாசம்
நொறுங்கிய குடியரசு
இளைய சமுதாயம் எழுகவே
பிசினஸ் டிப்ஸ்
பெருந்தன்மை பேணுவோம்
காலத்தின் சிற்றலை
கவர்ந்த கண்கள்
சிங்கப் பெண்ணே
படுகளக் காதை
காலத்தின் கப்பல்
கால பைரவர் வழிபாடு
ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்
ஹோமி பாபா
பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்
Caste and Religion
13 மாத பி.ஜே.பி ஆட்சி
ஒவ்வா
காலந்தோறும் பிராமணியம் (பாகங்கள் 2 - 3) சுல்தான்கள் காலம் - முகலாயர்கள் காலம்
ராகுல் சாங்கிருத்ரயாயன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மன்னித்துவிடு இன்பா!
கொற்கை
சிக்கலான நூற்கண்டு
எனக்குரிய இடம் எங்கே?
சி.சு. செல்லப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தமிழகத்தில் ஆசீவகர்கள்
மன்மதக்கலை
ஸ்ரீமந் நாராயணீயம் (மூலமும் உரையும்)
சந்திரமதி
காற்றைக் கைது செய்து...
ஔரங்கசீப்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
ஸ்ரீமத் பகவத் கீதை
பம்மல் சம்பந்தனார் (பேசும்படத் தொழில்நுட்பங்கள் - அனுபவங்கள்)
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே! 
Reviews
There are no reviews yet.