Sevakkaattu Chithirankal
தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரப்பகுதியிலிருந்தும் புதிய புதிய பதிவுகள் இலக்கியத்திற்குள் வந்துகொண்டே இருக்கின்றன. தமிழகிரிசாமியும், கி. ராஜநாராயணனும் சொல்லிய பின்னும் தென் பகுதியிலிருந்து பெரும் வரிசையில் எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு வட்டாரத்திற்குள்ளும் சிறு சிறு வட்டாரங்கள் பிரிந்து கிடப்பதும் இதற்கு ஒரு காரணம்.”ஏலேய் கவிதை தொகுப்பின் மூலம் அறிமுகமான கவிஞர் வே. ராமசாமி இதில் செவக்காட்டும். சித்திரங்கள் வரைந்து தன்னை சுவராசியமான கதை சொல்லியாக இனம் காட்டியுள்ளார். கிராமம் சார்ந்த எந்த ஒரு சின்ன விஷயத்தையும் சொல்முறையில் சுவையாக்கிட முடியும் என்பதற்கு இவர் எழுத்துக்கள் சான்று. கரிசல் காடு பற்றி அறிந்திருந்த நமக்கு செவக்காடு குறித்து வ. ராமசாமி சொல்லித்தான் தெரிகிறது.
Reviews
There are no reviews yet.