SIVANTHA MAN
சென்னை குரோம்பேட்டையில் வசிக்கும் இவரது சொந்த ஊர் திருச்சி. பிறந்து, வளர்ந்ததெல்லாம் வேலூரில்.டூல்ஸ் எஞ்சினியரிங் முடித்துவிட்டு பத்திரிகைத் துறைக்கு வந்த இவர், ‘பிலிமாலயா’, ‘பெண்மணி’, ‘சாவி’, ‘குங்குமம்’, ‘குமுதம்’, ‘தினமலர்’ இதழ்களில் பணிபுரிந்துவிட்டு இப்போது ‘குங்குமம்’ வார இதழுக்கு
முதன்மை ஆசிரியராக இருக்கிறார். ‘கர்ணனின் கவசம்’, ‘சகுனியின் தாயம்’ ‘மாஃபியா ராணிகள்’, ‘உயிர்ப்பாதை’ ஆகிய நூல்களைத் தொடர்ந்து அச்சில் வரும் இவரது ஐந்தாவது புத்தகம் இது.
நூல் குறிப்பு:
ஆரம்பநிலை வாசகர்களை மனதில் வைத்து ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழில் வெளியான தொடரின் நூல் வடிவம் இது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் மார்க்சிய, லெனினிய கோட்பாடுகளின் சுருக்கம் பெட்டிச்செய்தியாக இடம் பெற்றிருக்கிறது. எனவே ரஷ்ய, சீனப் புரட்சிகளின் வரலாற்றை மட்டுமல்ல… அந்த சரித்திரத்தை உருவாக்க காரணமாக அமைந்த சித்தாந்தத்தையும் இந்நூலின் வழியே அறியலாம்.
தமிழில் இதுபோன்ற ஒரு நூல் வருவது இதுதான் முதல்முறை.
மட்டுமல்ல. இதற்கு முன் வேறு எந்த தமிழ் வெகுஜன பத்திரிகையும் இப்படியொரு கனமான தொடரை வெளியிட்டதில்லை. எல்லா வகையிலும் முன்னோடியாக திகழும் ‘தினகரன்’ குழுமம், இதிலும் சாதனை படைத்திருக்கிறது. இப்புத்தகம் நேற்றைய வரலாற்றை பதிவு செய்யவில்லை. மாறாக நாளைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுவதற்கான தொடக்கநிலை கையேட்டை மக்கள் முன் சமர்பித்திருக்கிறது.
Reviews
There are no reviews yet.