1 review for சுமித்ரா
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹100.00
மலையாள இலக்கியத்தில் முக்கியக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் கல்பட்டா நாராயணன், சுமித்ரா இவருடைய முதல் நாவல். கவிஞர் என்பதால் இந்த நாவலும் கவிமொழியுடனேயே உருவாகியுள்ளது. பெண்களின் அகவுலகை அறிமுகம் செய்யும் இந்நூல் மலையாளத்துக்கே உரிய தனிச் சொற்களும் விரவிக் கிடக்கிறது. அதன் தன்மை மாறாமல் மொழிபெயர்ப்பும் அமைந்தது இதன் பலமே.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
அனைத்தும் / General
ART Nagarajan –
சுமித்ரா
கல்பட்டா நாராயணன்,
தமிழில் கே.வி.ஷைலஜா
வம்சி.
இந்த நூலை எனக்கு தந்து
தேர்ந்த வாசகனாக்க
முனைந்த தோழர்.
அய்யாக்கண்ணு கணேசன் அவர்களுக்கு நன்றி!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பட்டாவுக்கு அருகில் ஒரு கிராமத்தில் நடந்த கதை.
முப்பத்தெட்டு வயது
சுமித்ராவின் மரணமும்,
அதற்கு பின்பும் மரணத்தோடு மனிதர்களின் வாழ்க்கை
முடிந்து விடுவதில்லை
என்பதை கற்றுத்தரும்
சிறந்த நூல்.
சுமித்ராவின் மரணமறிந்து
பால்ய தோழிகள், உறவினர்கள், அருகிலிருப்பவர்கள், நட்புகள், இறுதிச்சடங்கில்
கலந்து கொள்ள வரும்போது சுமித்ராவைப்பற்றி அவர்களின் மனசு அசைபோடுவதை தமிழில்
மொழி பெயர்த்திருக்கிறார் கே.வி.ஷைலஜா.
அறிந்த சொற்கள்,
அறியாமையை போக்கி
இருள் நீங்கிய வாழ்க்கை பிடிபடுகிறது.
சுமித்ராவின் உடலை பார்க்க வந்திருந்தவர்களின் கதைகளை எந்த ஒளிவு மறைவில்லாமல்,
சொல்லப்படுகிறது!
சுமித்ராவை காதலித்த புருஷோத்தமன்,
கணவர் வாசுதேவன்,
மகள் அனுசூயா, இப்படி
பல்வேறு மனிதர்களை
அணுகியவிதம், சுமித்ராவின் மரணத்தின் பின்பும்
மரணிக்காத வாழ்க்கையை நமக்கு புலப்படுத்துகிறது!
மரணம் நமக்கு பல விஷயங்களை
அழுத்திச் சொல்கிறது
எத்தனை தீர்க்கமான சொற்கள்!
மரணவீட்டின் திண்ணையில் உட்கார்ந்து விளையாடும் குழந்தைகள் வாழ்வின் ஸ்திரத்தன்மை பற்றி எதையோ உணர்த்துகிறார்கள்.
மகள் அனுசூயா வந்தவுடன்
பிணம் மீண்டும் சுமித்ராவாக ஆனது!
எத்தனை சொல்லாட்சி!!
பனியர்கள் நெல்லின் பெயர்களை குழந்தைகளுக்கு வைத்தாலும்,
‘கந்தக சால’ என்றோ
‘சீரக சால’ என்றோ பெயர் வைக்கவில்லை, காரணம்
விலை உயர்ந்ததாலோ,
உயர்ந்த ரகம் என்பதாலோ
என நூலாசிரியர் எழுதி சுமித்ரா வழியாக சொல்வது அற்புதம்.
உடலை இறக்கி படுக்கவைப்பது,
உறவினர் வருகை,
மகள்அனுசூயாவின் தவிப்பு,
குளிக்கவைக்க தூக்குவது,
என ஒவ்வொரு செயலும் சுமித்ராவின் காலியிடத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தன.
உள்ளபடியே சுமித்ராவின் மரணத்தின் சந்நிதியில் அதிக நேரம் நிற்பதற்கான திராணி எனக்குமில்லை என்பதை மனிதர்களின் மனசை ஊடறுத்து எழுதியிருக்கிறார்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART.நாகராஜன்
வாசகர் வட்டம், மதுரை
29.03.2020