Thiruppumunai
வாழ்க்கைக் கதைகளைவிட சிறந்த இலக்கியம் வேறு எது? மனிதர்களே மிகச் சிறந்த புத்தகங்களாக இருக்கிறார்கள். மிகச் சாதாரண நிலையிலிருந்து வெற்றி ஏணியில் காலடி வைத்து, ஏராளமான திருப்பங்களை சந்தித்து, தாங்கள் சந்தித்த தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, வெற்றிக்கான பாதை எது எனப் புரிந்து அதில் தடம் பதித்து, துயரங்களைத் தாங்கி மன உறுதி பெற்று, வெற்றிகளில் பணிவு சேர்த்து உயரும் ஒருமனிதரின் கதை, எவ்வளவு பெரிய சாகசக் கதையையும்விட உன்னதமானது. அப்படி இந்த நூலில் 28 சாதனையாளர்கள் தங்களது வாழ்க்கைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்கள்.
எல்லோராலும் இத்தனை பேரின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடியாது; அவர்களது வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்டால், அதைவிட ஆகப்பெரிய பயன் வேறு எதுவும் இருக்க முடியாது. ஐ.ஐ.எம் போன்ற மிகச்சிறந்த நிர்வாகவியல் கல்லூரிகளில் கிடைப்பதைவிடவும் பெரிய நிர்வாகவியல் பாடத்தை இந்த நூல் வழங்கும். ‘குங்குமம்’ இதழில் ‘ஒத்தையடிப் பாதை’ தொடரின் மூலம் ‘முதல் தலைமுறை வெற்றியாளர்’களின் வாழ்க்கைக் கதையை எழுதிய த.செ.ஞானவேல், அதன் தொடர்ச்சியாக எழுதிய ‘திருப்புமுனை’ கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தங்கள் வாழ்வின் திருப்புமுனை தருணங்களை உணர்ந்து, அந்த நேரத்தில் மிகச் சரியான முடிவெடுத்து சிகரங்களைத் தொட்டவர்களின் சிலிர்ப்பூட்டும் பயணம் அழகான வடிவமைப்பில் புத்தகமாகியுள்ளது. எந்தத் துறையிலும் முன்னேற நினைப்பவர்கள் மூச்சுக்காற்றாக இதை சுவாசிக்கலாம்; வாசிக்கலாம்!.
Reviews
There are no reviews yet.