THOZHAMAI ENRORU PEYAR
எங்கும் நிறைந்திருக்கிற வானம் போல ஆசுவின் உள்ளத்திலும் அவர்தம் அத்தனைக் கவிதைத் தொகுதிகளிலும் நல்ல நல்ல கவிதைகளே நிரம்பியிருக்கின்றன. ‘ஆறாவது பூதம்’ துவங்கி, ‘தோழமை என்றொரு பெயர்’ வரை அவரது கவிதைகளை முழுமையாக வாசித்து விட்டவன் என்கிற நிலையில் ஆசுவின் கவிதைகளைப் பற்றி இப்படிச் சொல்லலாம், ஆயிரங்காலத்து மரமொன்றில் இப்போது துளிர்த்த இலைகள் அவை. அதில் ஆயிரங்காலத்து சலசலப்பும், அமைதியும் நிழலும் இப்போது துளிர்த்த இலைகளிலும் வேர் கொண்டிருக்கிறன. அவை எப்போதும் ஆசுவிடமும் ஆசுவின் கவிதைகளிலும் முழுமையாய் செழித்து இருக்கின்றன. இந்நூலின் எண்ணற்ற பக்கங்களில் எனக்குப் பிடித்த கவிதைகள் ஏராளமாய் இருக்கின்றன. ஒவ்வொன்றும் பெரும் மனச்சிக்கலிலிருந்து விடுபடும் ரகசியத்தை ப்பூ… என ஊதித் தள்ளிவிட்டுப் போய்க்கொண்டே இருங்கள்… அப்படித்தான் வாழ்க்கை… அவ்வளவுதான் வாழ்க்கை…. என்பதைப் போல ஒரு தீர்வை அவிழ்த்துப் போடுகின்றன.
Reviews
There are no reviews yet.