தூக்குமேடை குறிப்பு – விரிவான, முழுமையான பதிப்பு

Publisher:
Author:

90.00

தூக்குமேடை குறிப்பு – விரிவான, முழுமையான பதிப்பு

90.00

தூக்குமேடைக் குறிப்பு :

“நான் சுவருக்குள் அடைபட்ட சிறை வாழ்க்கையை விட்டு, களிப்புடன் கரை புரளும் இந்த மனித வெள்ளத்தின் நடுவே நீந்துகிறேன். இங்குநான் பார்ப்பது வாழ்வு; நான் தற்போதுவிட்டு வந்திருப்பதும் வாழ்வுதான். எவ்வளவுதான் பலமாக நசுக்கப்பட்டாலும் வாழ்வு அழிக்க முடியாதது. ஓர் இடத்தில் அது நசுக்கப்படலாம். ஆனால் நூறு இடங்களில் அது வெடிக்கிறது. அது வாழ்வு. சாவை விட உறுதியாக நிலைக்கிறது.” …தூக்கு மேடையில் ஏற்றப்படுவதற்கு முன், ஜூலியஸ் பூசிக் என்ற செக்கோஸ்லாவாகிய நாட்டுக் கம்யூனிஸ்ட் எழுதிய வரிகள் இவை சித்ரவதைகளுக்கு நடுவே சிறு சிறு துண்டுத்தாள்களால் ப்யூசிக் அமைத்த கருத்துப் பாலம்தான் இந்த தூக்கு மேடைக் குறிப்பு நூல். சிறைப்பட்டுக் கிடந்த அந்த நிகழ்காலத்திற்கும், விடுதலையாகப் போகிற மனித சமூக எதிர்காலத்துக்கும் நடுவே ஒரு பாலத்தை அமைக்கத் துணிந்த வீரர் அவர். தூக்குக் கயிறால் அவருடைய கழுத்தைத்தான் நெரிக்க முடிந்ததே தவிர, அவருடைய எண்ணங்களை அல்ல. அவரது மனைவி அகஸ்தினா ப்யூசிக், இந்தக் குறிப்புகளைத் தேடித் தொகுத்து வெளியிட்டார். இஸ்மத் பாஷாவின் அற்புதமான தமிழாக்கத்தில் வெளியாகி, வெற்றி கண்ட நூல் இது.

Delivery: Items will be delivered within 2-7 days