அளவு கடந்த உற்சாகத்தோடும் முழு அர்ப்பணிப்பு உணர்வோடும் ஒரு பணியை எடுத்து வெற்றிகரமாகச் செய்துமுடிப்பது எப்படி?· நம் ஒவ்வொருவரிடமும் உள்ள மூன்று வலுவான ஆயுதங்களான உடல், மனம், புத்தி மூன்றையும் சரியான கலவையில், சரியான சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவது எப்படி?· பணியிடம், குடும்பம், சமூகம் என்று திரும்பும் திசை எல்லாம் எதிர்படும் பலவிதமான மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது?· தெளிவாக இலக்கு நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி அடி மேல் அடி எடுத்துவைத்து நகர்வது எப்படி?· வாட்ஸ் அப், சமூக வலைத்தளம் போன்றவற்றால் ஏற்படும் கவனச் சிதறல்களை எப்படி கையாள்வது?· மன உளைச்சலின்றி வாழ்வது எப்படி?· ஆற்றலையும் அறிவையும் பெருக்கிக்கொள்வது எப்படி?· ஒரே சமயத்தில் பலவற்றைக் கற்பது, பல பணிகளைச் செய்வது, பலவற்றில் கவனம் செலுத்துவது நல்லதா அல்லது ஒரு நேரத்தில் ஒன்றில் மட்டும் ஒட்டுமொத்த கவனத்தையும் குவிப்பது நல்லதா? பங்குச்சந்தை, சுய-முன்னேற்றம், நிர்வாகவியல் என்று பல துறைகளில் இயங்கிவரும் வள்ளியப்பனின் இந்நூல் எளிமையாகவும் சுவையாகவும் இருப்பதோடு வாழ்க்கைக்கான முக்கியமான அடிப்படை நூலாகவும் திகழ்கிறது. உங்கள் வெற்றியை உறுதிசெய்யும் ஒரு முக்கியக் கருவி இது.
Reviews
There are no reviews yet.