வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
சிலவகை வெளிப்பாடுகளுக்கு இசை ஓவியம் கவிதை கதை சினிமா நாடகம் என்று எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு நுல் பொருள்தேடி அலையக்கூடாது புரிந்து கொள்ளல் என்ற ஓர் இடத்தில் நின்று கொண்டு அவற்றை ஈட்ட முயற்சிக்கக்கூடாது. இது ஏன், இப்படி ஏன், அப்படி ஏன் இல்லை, எது ஆரம்பம், எது முடிவு என்று கொக்கிகளைப் போடக்கூடாது. அவற்றுக்கு நம்மை ஒப்புக் கொடுத்து விட வேண்டும். எங்கு வேண்டுமானாலும் இட்டுச் செல் என்று வந்து வந்து பாதங்களைத் தொடும் கடலலைகளைப் போல் அவை நம்மைத் தொட்டுத் தொட்டுச் செல்லும் அனுபவத்தைத் தர அவற்றுக்கு வாய்ப்புத்தர வேண்டும் ‘விடம்பனம்’ அப்படிப்பட்ட ஒரு வெளிப்பாட்டு முயற்சிதான்.
– அம்பை
Reviews
There are no reviews yet.