Velaikku Welcome
நேர்முகத் தேர்வுக்கு வழி காட்டும் புத்தகங்கள் நிறையவே வந்திருக்கலாம். ஆனால், இந்தப் புத்தகம் வேறு மாதிரி. நிச்சயம் இதுநாள் வரையில் இல்லாததொரு நுட்பமான பதிவை இதன் பக்கங்களில் நீங்கள் தரிசிக்கலாம். இன்றைய உலகம் ஒரு பிரமாண்ட பாம்பு போல வருடத்துக்கொருமுறை சட்டை உரித்து, புத்தம் புதிதாகிவிடுகிறது. காரணம், தொழில்நுட்பம். எல்லா துறைகளையும் அது புரட்டிப் போடுகிறது. நம் வாழ்வின் அன்றாட நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் தொழில்நுட்பம் பாதிக்கிறது. ஷாப்பிங், ஹோட்டல், ரயில் டிக்கெட்… எதுவுமே இப்போது முன் போல் இல்லை. பல மாற்றங்கள் கண்டு எங்கோ வந்து நிற்கின்றன.
இன்டர்வியூ மட்டும் அப்படியே இருக்குமா என்ன?
போன் இன்டர்வியூ, ஸ்கைப் இன்டர்வியூ, லன்ச் இன்டர்வியூ என இந்தக் கால நேர்முகத் தேர்வுகளின் நவீனப் போக்குகளை இந்தப் புத்தகம் பேசுகிறது. இன்டர்வியூ சமயத்தில் உங்கள் டயட்டில் தொடங்கி உடைகள் வரை எப்படி எப்படி இருக்க வேண்டும் என்ற உளவியல் வழிகாட்டுதலை இதில் பெறலாம். வெறும் நேர்முகத் தேர்வு என்று மட்டும் நின்றுவிடாமல், இன்றைய இளைஞனின் வெற்றிக்கு தடைக்கற்களாக நிற்கும் அனைத்தையும் அடையாளம் கண்டு பல கோணங்களில் அதை அலசுகிறது இந்தப் புத்தகம். பேசப் புகும் சங்கதி எதுவோ அதற்கு ஏற்ற நிபுணர்களைத் தேடி, ஆலோசனைகளைப் பெற்று, அதை எளிய நடையில் இங்குத் தொகுத்துத் தந்திருக்கிறார் கோகுலவாச நவநீதன்.
வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கும் நமது, ‘குங்குமச்சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி’ இதழில் வெளிவந்து, பெரும் வரவேற்பை பெற்ற தொடரே புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. வேலை தேடும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமல்லாது, தங்கள் பணியையும் வாழ்வையும் அடுத்த தளத்துக்கு உயர்த்த நினைக்கும் அனைவருக்குமே இந்தப் புத்தகம் ஒரு Must Have கைடு எனலாம்!.

101 ஒரு நிமிடக் கதைகள்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்? 
Reviews
There are no reviews yet.