Vetri Nichayam
நல்ல பாதையைப் போட்டுக் கொடுத்துவிட்டால் அதில் பயணம் செய்வதற்கு உங்களுக்கும் எளிதாக இருக்கும். அப்படியொரு அற்புதமான நல்ல பாதையை உங்களுக்கு அமைத்துக் கொடுக்கும் முயற்சிதான் இந்தப் புத்தகம்.உங்களிடம் உள்ள ஆற்றல்தான் வெண்ணெய். உங்களுக்கு வெற்றி என்ற நெய் தேவைப்படுகிறது. வெண்ணெயை எப்படி நெய்யாக மாற்ற வேண்டும் என்கிற வழிமுறை மட்டும் தெரிந்துவிட்டால் நீங்கள் உங்களது தேவையை நிறைவேற்றிக் கொள்ளப் போகிறீர்கள். இதனால் உங்களது வெற்றி உங்கள் மடியின்மீது வந்து விழும். ஆகவே உங்களைப் போல உள்ள லட்சக்கணக்கானவர்களுக்கு வெற்றிக்கான வழி என்ன என்பதைக் கற்றுக் கொடுத்துவிட்டால் அதன்பின் நீங்கள் வானத்தையே வில்லாக வளைப்பீர்கள்.உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொருவரையும் வெற்றியாளர் ஆக்குவதற்கு உங்களுக்குக் கிடைத்திருக்கும் மந்திரக்கோல் இது. மாய விளக்கும்கூட என்று வைத்துக் கொள்ளலாம். இருந்தாலும் மூடத்தனமாக மந்திர தந்திரங்களின் மேல்மட்டுமே நம்பிக்கை வைக்காமல் உங்களை நம்பி முன்னேறுவதற்கே இதைப் பயன்படுத்துங்கள். உள்ளுக்குள் ஆற்றல் இல்லாத மனிதன் என்று இந்த உலகத்தில் யாரும் கிடையாது. ஆனால் அப்படி ஒரு சக்தி உங்களுக்குள் இருக்கிறது என்பதையே நீங்கள் உணராமல் இருக்கலாம். கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு நீங்கள் அலைய வேண்டியதில்லை.

108 திவ்ய தேச உலா பாகம் (பாகம் – 4)
Mother
உயர்ந்த உணவு
English-English-TAMIL DICTIONARY Low Priced 
Reviews
There are no reviews yet.