வெற்றிக்கு சில புத்தகங்கள் – பாகம் 3
ஒரு புத்தகத்தால் என்ன செய்துவிடமுடியும் என்பதற்கான எளிமையான அதே சமயம் உறுதியான பதில், ஒரு புத்தகத்தால் செய்யமுடியாது எதுவுமில்லை என்பதுதான். கல்வி, வேலை, காதல், குடும்பம், தொழில் என்று வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேறிச் செல்வதற்கு புத்தகங்களைவிட அணுக்கமான துணை கிடைப்பது அரிது. ஆனால் இருக்கும் வேலைகளுக்கு மத்தியில் நமக்கான புத்தகங்களை எப்படித் தேர்ந்தெடுப்பது? எத்தனைப் புத்தகங்களை வாங்கிக் குவிப்பது? நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பக்கங்களைப் படித்து நமக்குத் தேவையான அம்சங்களை மட்டும் எப்படி அடையாளம் கண்டு பிரித்தெடுப்பது? படித்ததையெல்லாம் எப்போது செயல்படுத்திப் பார்த்து வெற்றியை ஈட்டுவது? மலைப்பூட்டும் இந்தப் பெரும்பணியைச் செய்து முடிக்க உங்களுக்கு உதவும் ஒரு மகத்தான வழிகாட்டி இந்நூல். உங்கள் வெற்றியை உறுதிசெய்ய ஒரு நூலகத்தையே சாறு பிழிந்து உங்களுக்காக அளித்திருக்கிறார் என். சொக்கன். பாதுகாக்க, பரிசளிக்க இதைவிடச் சிறந்த நூல் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்ததில்லை.

கொடூரக் கொலை வழக்குகள்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
ஜீவ சமாதிகள் 


Reviews
There are no reviews yet.