YAAKAI
-குருவை, ஞானத்தை, அமைதியைத் தேடுவதற்கு அடிப்படையான காரணம் என்ன? அன்றாடத் தகிப்பிலிருந்து தப்பித்து வெளியேறும் வேட்கைதான் ஒருவர் கண்டடையக்கூடிய ஞானமா? காமமும் செல்வமும் மனித அகத்தைச் செழுமைப்படுத்துவதற்குப் பதிலாகக் கொந்தளிப்பை உண்டாக்குவதை நுண்தளத்தில் கையாளும் நாவல் யாக்கை. உடல் அடையும் இன்பத்தின் உச்சத்தையும் மனம் இழக்கும் அமைதியையும் இரு முனைகளாகக் கொண்டு நாவல் விரிவடைகிறது. துறவறத்தின் மாயநிலைகளை இந்த நாவல் தன் பாத்திரங்கனூடே நிகழ்த்திக்காட்டுகிறது. குடும்ப அமைப்பிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள விரும்பும் இளைஞனின் அகப்போராட்டத்தை, அன்றாட இன்னல்களை, சிக்கல்களை, நிலையின்மையால் உருவாகும் தடுமாற்றங்களை, போதாமைகளை மறைத்து வாழும் சிறுமைகளை, அவமானங்களை நாவல் விவரிக்கிறது.

அக்கிரகாரத்தில் பெரியார்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
PFools சினிமா பரிந்துரைகள் 


Reviews
There are no reviews yet.