யானைக்கனவு
நீங்கள் வற்றவைத்த நதிகளுக்காகவும், விட்டு வைத்த நதிகளுக்காகவும் ஆகப் பெரிய கண்ணீ ருடன் காத்துக் கிடக்கிறது கடல்கைவசம் இருப்பது ஒரே ஒரு பட்டுச்சட்டை அழுக்குப் பிடிக்கும் முன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறது பட்டாம்பூச்சி.என் பெயர் திரவியம். நற்பணி நோக்கோடு கரம் கோர்த்த என் நண்பர் குழுவின் பெயர் இளந்தென்றல். நாங்கள் முதன் முதலாய் தொடங்கிய கையெழுத்துப் பத்திரிகையின் பெயரும் இளந்தென்றல். அதன் நினைவுகளையும் என் பெயரோடே சேர்த்துக் கொண்டு இந்த எழுத்துப் பயணத்தை தொடங்கியிருக்கிறேன்..நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். குடும்பத்தின் முதல் பட்டதாரி. சொந்த ஊரில் சுயதொழில் செய்து வருபவன்.எண்ணத்தை எழுத்தாக்குவதிலும், அதை அச்சில் என் பெயரோடு சேர்த்துப் பார்ப்பதிலும் தீராத காதல் கொண்டதன் விளைவே இந்த நூல் முயற்சி!என் எழுத்துக்கள் உங்கள் எண்ணத்தோடு கைகுலுக்கும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து உங்களை எழுத்துக்களால் சந்திப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

சஞ்சாரம்
Carry on, but remember!
One Hundred Sangam - Love Poems 


Reviews
There are no reviews yet.