‘நீங்கள் எத்தனை பலமிக்கவராக வேண்டுமானாலும் இருந்துகொள்ளுங்கள். நீங்கள் உயர்த்திப் பிடிக்கும் பதாகையின் நிறம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உங்கள் உதடுகள் எத்தகைய உயர்ந்த உண்மையை உச்சரித்தாலும் கவலையில்லை. நீங்கள் மக்களை மதியாதவராக, அவர்களைத் துன்புறுத்துபவராக, அவர்களுடைய சடலங்கள் பெருகுவதைப் பொருட்படுத்தாதவராக இருந்ததால் உங்கள் பலமும் சித்தாந்தமும் உண்மையும் எம்மக்களுக்குப் பயனற்றவை’ என்றார் ராஜனி திராணகம. ஒரு புத்திரனால் அவர் கொல்லப்பட்டார். நக்சல்பாரி அலையால் ஈர்க்கப்பட்ட அனுராதா கண்டிக்கு ராஜனி போலவே வாழ்க்கை என்பதும் போராட்டம் என்பதும் வெவ்வேறானவையல்ல. இருவரும் கொல்லப்படுவதற்கு அவர்கள் எழுப்பிய எதிர்க்குரலே காரணமாக அமைந்துவிட்டது. சில்வியா பிளாத்தின் கலகம் கவிதையாக வெளிப்பட்டது என்றால் அருந்ததி ராய்க்கு அரசியலாக. மீராவின் பாடல், கங்குபாய் ஹங்கலின் இசை, மஹாஸ்வேதா தேவியின் சிறுகதை, உமா சக்கரவர்த்தியின் பௌத்தம், ரொமிலா தாப்பரின் வரலாறு என்று பிரிக்கமுடியாதபடி நம்மோடு கலந்துவிட்டிருக்கும் தனித்துவமிக்க சில பெண்களின் எதிர்க்குரல்களைத் தொகுத்தெடுத்துப் பதிவு செய்கிறது இந்நூல்.
Reviews
There are no reviews yet.