SUGAR FREE DONT WORRY
‘உலகின் சர்க்கரை நோய் தலைநகரம்’ என இந்தியாவை அழைக்கிறார்கள். தமிழகம் இந்த விஷயத்தில் முன்னிலையில் இருக்கிறது. பாரம்பரியமான வாழ்க்கை முறையையும் உணவுமுறையையும் தொலைத்து, மேற்கத்திய கலாசாரத்தையும் உணவுப்பழக்கத்தையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றியதன் விளைவு இது! சர்க்கரை நோயை ‘நம் வாழ்நாள் முழுவதும் நம்முடனே இருக்கும் வேண்டாத விருந்தாளி’ எனலாம். அவர் நம்மைவிட்டுப் போகப் போவதில்லை என்பதை அறிந்தபிறகு அவரை சகித்துக்கொண்டு வாழப் பழகிவிட வேண்டும். அவர் நமக்குள் பாதிப்பை ஏற்படுத்தவும், நம்மை முடங்கச் செய்யவும் அனுமதிக்கக்கூடாது. இதுதான் சர்க்கரை நோயை சமாளிப்பதற்கான பாலபாடம்.
இதை எளிய தமிழில், பாமரருக்கும் புரியக்கூடிய உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார் டாக்டர் நியோ சர்ச் தர்சிஸ்.
சர்க்கரை நோய் சிகிச்சையில் அவர் பெற்ற நிபுணத்துவமும், பல ஆண்டு களாக சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பெற்ற அனுபவங்களும், மருத்துவ மாணவர்களுக்குப் பாடம் எடுத்ததிலும் நோயாளிகள் கூட்டங்களில் பேசியதிலும் கிடைத்த திருப்தியும் அவரை இந்த நூல் எழுதத் தூண்டியுள்ளது. சர்க்கரை நோய் இருப்பதாக அறிந்ததும், அதை எப்படி எதிர்கொள்வது? எப்படிப்பட்ட பரிசோதனைகள் அவசியம்? என்ன கால இடைவெளியில் பரிசோதனைகள் செய்ய வேண்டும்? உணவு விஷயத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? வாழ்க்கை முறையை எப்படி மாற்ற வேண்டும்? மாத்திரைகள் சிறந்ததா? இன்சுலின் சிறந்ததா? உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காவிட்டால் என்னென்ன பாதிப்புகள் நேரும்? சர்க்கரை நோய் உடலின் முக்கிய உறுப்புகள் ஒவ்வொன்றிலும் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன? அவற்றைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என எல்லாம் சொல்லி, இனிய வாழ்வுக்கு வழிகாட்டுகிறது இந்த நூல். ஒரு டாக்டர் உங்கள் வீட்டில் இருப்பது போன்ற பாதுகாப்பை இந்த நூல் மூலம் நீங்கள் உணர முடியும்..
Reviews
There are no reviews yet.