THENKATCHI – KADHAI RAJAVIN NKADHAI
கதைகளின் வழியே நீதியையும் அறத்தையும் குழந்தைகளுக்குப் போதித்த மரபு நம்முடையது. நீதிக்கதைகள் என அதற்குப் பெயர் உண்டு. உதாரணங்களாக மனிதர்களையும் விலங்குகளையும் காட்டி, ‘நல்லவன் வாழ்வான்’ என்ற நம்பிக்கையைக் காலம் காலமாகப் பிள்ளைகளின் மனதில் விதைத்து வந்திருக்கிறோம். எதைச் செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை வறட்டு அறிவுரைகளாக நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்ததில்லை. ‘இப்படிச் செய்தவன் இப்படி ஆனான்’ எனக் கதைகளைச் சொல்லி உணர்த்திவந்தோம். சர்க்கரை தடவிய மருந்தாக அவை இருந்தன!
குழந்தைகளுக்கான கதை நூல்கள், பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு என அந்தப் பாரம்பரிய மரபு இங்கு தொடர்ந்து வந்திருக்கிறது. நம் பள்ளிகள் வெறும் கல்வியை மட்டும் போதிக்கும் இடமாக இருந்ததில்லை. சமூகத்துடன் பழகுவதையும் சமூக ஒழுக்கத்தையும் பள்ளிகளில்தான் பிள்ளைகள் பெற்றனர். ஆனால் மதிப்பெண்களை நோக்கிய ஓட்டத்தில் இந்தத் தலைமுறை பிள்ளைகளுக்கு இவை மறுக்கப்படுகின்றன. அதனால்தான் ஒரு சமூகச் சிக்கலை எதிர்கொள்ள நேரும்போது, மந்தையிலிருந்து வழி தவறிய ஆடு போலப் பலரும் திகைத்து நிற்கிறார்கள்.
இந்தத் தலைமுறைக்கு எங்கும் கிடைக்காத இந்த அறநெறியை தென்கச்சி சுவாமிநாதன் தன் வாழ்நாள் முழுக்க கதைகளின் வழியே தந்து கொண்டிருந்தார். அந்த வகையில் அவர் தனித்துவமானவர். அவரைப் பற்றிய இந்த நூலும் தனித்துவமானது. தென்கச்சி சொன்ன கதைகளின் வழியே அவரது வாழ்க்கையைத் தந்திருக்கிறார் கோமல் அன்பரசன். அரிய புகைப்படங்கள், தென்கச்சி தன் கைப்பட எழுதி வைத்திருந்த கதைகள், பொன்மொழிகள் என எல்லாவற்றையும் தொகுத்துத் தந்திருக்கிறார் கோமல் அன்பரசன். இது சூரியன் பதிப்பகத்தின் பெருமைக்குரிய நூறாவது வெளியீடு!
Reviews
There are no reviews yet.