BJP vadakizhakkai venra varalaaru
இந்தி பேசும் மாநிலங்களைத் தாண்டி பா.ஜ.கவுக்கு செல்வாக்கு கிடையாது; அதுவும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பழங்குடியினர் ஆகியோர் அதிகமாக இருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.கவுக்குச் செல்வாக்கு என்பது சாத்தியமே இல்லை என்று எதிர்க்கட்சிகள் சொன்னார்கள். ஆனால் என்ன நடந்தது? அன்புத் தம்பி SG சூர்யா, வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க எப்படி வலுப்பெற்றது, எப்படி மூன்றே வருடங்களில் ஒன்றுமில்லாத இடத்திலிருந்து ஒட்டுமொத்தப் பகுதியிலுமே தன் செல்வாக்கை அதிகப்படுத்தியது என்பதை மிக விரிவாக இந்நூலில் விளக்கியிருக்கிறார்.
– அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட கட்சி மேற்கொண்ட உத்தி சார்ந்த தேர்தல் செயல்பாடுகள் பற்றி தமிழில் விரிவாக ஒரு புத்தகம் வருவது இதுவே முதன்முறையாகும். தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தேர்தல் செயல்பாட்டு முறைக்கும், வடகிழக்கில் பாரதிய ஜனதா கடைப்பிடித்த முறைக்குமான ஒப்பீட்டை மேற்கொள்ள ஒரு வாய்ப்பை நமக்கு வழங்கியிருக்கிறது இந்தப் புத்தகம். ஓட்டுக்கு நோட்டு கொடுக்காமலும், இலவசங்கள் பற்றிய அறிவிப்பு இல்லாமலும் வெற்றியைச் சாதித்திருப்பது ஒரு தமிழன் என்கிற முறையில் வியப்பை ஏற்படுத்துகிறது.
– கோலாகல ஸ்ரீனிவாஸ்
வடகிழக்கு இந்தியாவில் இருக்கும் ஏழு மாநிலங்களும் சமூக ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாகத் தனித்துவம் வாய்ந்தவை. மணிப்பூரில் சர்ச்சையில் ஈடுபடும் பழங்குடியினரை ஒருமித்த கருத்தில் ஒன்றிணைப்பதும் மத உணர்வுகளைச் சமநிலையுடன் கையாள்வதும் பா.ஜ.க-வின் முக்கியச் சவால்களாக இருந்தன. கிறித்துவ மதம் ஆதிக்கம் செலுத்துகிற பகுதியான நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் ஆட்சிக்கு வருவதன் பின்னிருக்கும் சவால்கள் குறித்தும் இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது.
திரிபுராவில் கம்யூனிசக் கட்சியின் நெருக்கடிகளை உடைத்தெறிந்து பா.ஜ.க ஆட்சிக்கு வந்திருக்கும் இந்த நிகழ்வு, இந்திய அரசியல் வரலாற்றின் ஒரு முக்கியப் பக்கம் என்றே சொல்லவேண்டும்.
–அண்ணாமலை ஐபிஎஸ் (ஓய்வு).
Reviews
There are no reviews yet.