Manusanga
காலம் பின் நின்று கணக்குப் பார்க்கும் கி.ரா.வின் மொழி ஆட்சியை, இன்றே ஐந்தொகை போட்டுப் பார்ப்பது அநாவசியம். கி.ரா.வின் படைப்புகளில், கதாபாத்திரங்களில், மொழியில், கிராமத்து வாழ்வில், மரபில், சடங்குகளில் எண்ணற்ற பல்கலைக்கழக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். நூல்கள் எழுதப்பட்டிருக்கலாம். அவை யாவும் கல்யாணி ராகத்தை நாழியால் அளப்பது போலவே இருக்கும். அல்லது அந்தகன் வேழத்தைத் தடவிப் பார்த்து அதன் வடிவம் நிர்ணயிப்பது போலவும்.
– நாஞ்சில் நாடன்
Seethalakshmi –
#வாசிப்பை நேசிப்போம்
#வாசிப்பு மாரத்தான்_ 2021
#RM00184
#23/100
#கி.ரா.வாசிப்புப்போட்டி
Prasancbe Thamirabarani
புத்தகம்: மனுஷங்க
ஆசிரியர்: ராஜநாராயணன்
பதிப்பகம்: அன்னம்
பக்கங்கள்: 127
விலை: 100/-
திரு.நாஞ்சில் நாடன் அவர்களின் அருமையான முன்னுரையுடன் தொடங்குகிறது. தனக்கும்
கி.ரா. அவர்களுக்குமான பிணைப்பையும் சந்திப்பையும் பற்றி 17பக்கங்கள். எதை அடிக்கோடிடுவது
எதை விடுவது என்று தெரியவில்லை. நிறைய புத்தகங்கள் ஆசிரியர் பரிந்துரைகள்
என்னுடைய மூளைக்கு அது மட்டுமே எழுதத் தோன்றுகிறது
கி.ரா வின் எழுத்து பல நூறு ஆண்டுகளாகத் தமிழன் உண்டு மகிழ்ந்த வெந்தயக் காடி, உளுந்தங்கஞ்சி, சிறுபயறு சுண்டல் போன்றது. எழுத தரங்களை பரிசீலிக்க முனைந்த பலரும் இந்தக் கோணத்தில்
புரிந்து கொள்வதில்லை —–
லஜ்ஜை கெட்டக் கீரையை பற்றி கேட்டபோது லெஜ்ஜை எனின் வெட்கம், கீரைக்கு ஒன்றும் வெட்கம் கெடவில்லை. ஆனால் கீரையின் ருசி, வெட்கம் விட்டு இன்னும் இன்னும் என்று கேட்கச் சொல்லுமாம்
என்று புத்தகம் முழுக்க உணவு உணவு சார்ந்த, விவசாயம் சார்ந்த, பசு மாடு, மாடு தொழுவம்,
ஆடு என எல்லோரும் விரும்பும் கிராமத்து மனம் கமழ்கிறது
நாஞ்சில் நாடன் அவர்களது புத்தகங்கள்: தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில காயும்,
மாமிசப் படைப்பு, தெய்வங்கள் ஓநாய்கள் அதைப்பற்றியும் கூறியிருக்கிறார்
சா.கந்தசாமியின் – தக்தையின் மீது நான்கு கண்கள்
அ.கா. பெருமாள் – நாஞ்சில் நட்டு வட்டலற வலுக்குச் சொல்லகராதி
கண்மணி குணசேகரின் – நாடு நாட்டுச் சொல்லகராதி
பெருமாள் முருகனின் – கொங்கு நட்டுச் சொல்லகராதி
சீனிவாசராவ் – தலைமறைவு வாழ்க்கை
கிராமத்தை சுற்றி உள்ள மூத்தோர்களின் வாழ்கை பற்றிய கதைகள், கதைகள் மட்டுமல்ல
உணவுகுறிப்புகள் 1பக்கத்திற்கு குறிப்பு வைத்து எழுதியுள்ளேன். கண்டிப்பாக் கி.ரா. அவர்கள்
சொல்லகராதி கண்டிப்பாக வாங்க வேண்டும் சில வார்த்தைகள் அர்த்தம் கடினமாக உள்ளது
ஆனால் கதையில் ஆழ்ந்து படிக்கும்போது அர்த்தம் தானாக புரிகிறது இதுவாகத்தான்
இருக்கும் என்று மனம் மகிழ்ச்சி அடைகிறது
தூக்கத்தில் இத்தனை விதங்களா? சீனி நாயக்கர் கதையில் நெடுஞ்சாண் கிடையாக,
கும்பிடு என்றால் குப்புற ; கோழித்தூக்கம் என்றல் மட்டமல்லாக்க;
வாழ்வில் நாம் இவரைப்போன்று நாம் வாழவே கூடாது என்று நினைக்காத தோன்றும்
அப்படி ஒரு வாழ்வு சீனி நாயக்கரின் வாழ்வு. கூடவே இருந்து அன்பாக பார்த்துக்கொண்ட
நாச்சியாளை திருமணம் செய்து கொள்ள முடியாமல் எல்லா சொத்துக்களையும் விற்று தீர்த்து
ஊர் முழுக்க சுற்றி வந்து என்ன கற்றுக்கொண்டார். யாருக்கு என்ன உபயோகம் இல்லை
தனிப்பட்டு அவருக்கு என்ன சந்தோஷம் என எதுவுமில்லாமல் எப்படி சுற்றி வர முடிந்தது
என்ற ஒரு கதைதான்
எனக்கு மிகவும் பிடித்த கதை தூங்கா நாயக்கர் கதைதான் ஆடு மாடுகளின் கதை மட்டுமில்லாமல்
காட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து தொப்புள் கொடியை பல்லால் கடித்து துப்பி
கொண்டுவந்த சுள்ளிகளை எடுத்துச்சென்ற பெண்ணை மரத்தின் மீது அமர்ந்திருந்த ராஜா
ஒருவர் பார்க்கிறார் என்ற துணைக் கதைகளும் அருமை. கிடைக்காவல் பார்த்துக்கொண்டிருக்கும்
காவலாளியை எப்படி திசை திருப்புகிறார் என்ற விதம் எவ்வளவு நுணுக்கமாக கிராமத்து
வாழ்க்கையை உணர்ந்திருப்பார் என்று தோன்றியது
ஆடு மேய்ப்பவர்கள் நிறைய கதைகள் சொல்லுவார்கள். கிடை தூங்கிக்கொண்டிருக்கும்போதே
இயங்கிக்கொண்டிருக்கும். ஆட்டிற்கு மூக்கு ஈரமாக இல்லையென்றால் காய்ச்சல் கண்டிருக்கும்
கவனிக்க வேண்டும்
இந்த குடும்பக் கட்டுப்பாடு என்பதெல்லாம் “நேத்து” வந்தது “ஒரு பிள்ளை வம்சம்” என்பது
பூர்வீகத்திலிருந்து வருவது. ஒரே ஆண் பிள்ளை: அல்லது ஒரே பெண் பிள்ளை. மிஞ்சிப்
போனால் ஒரு ஆணும் பெண்ணும்.
உத்தியம்மாவின் வர்ணனனை மிகவும் அழகு. குழந்தைகளும் பெண்களும் தூங்கும்போது
மிகவும் அழகு….. கலைக்கூடாத தூக்கம் என்றும் கூறியது சிறப்பு. சம்சாரிகள் வீடு கட்டிக்கொள்வது
அவர்கள் தங்கிக்கொள்ள இல்லை. தங்கள் புலன்களில் அவர்கள் பயிர் செய்யும் விளைச்சலான பருத்தி,
கம்மம்பில், பருப்பு வகைகள், போன்ற பலன்களை குவித்துவைக்கவும் மூடைகள் போட்டு
அடுக்கி வைக்கவுமே. அவைகளோடு இவர்களுடைய பெண்டு பிள்ளைகளும் படுத்து உறங்குவார்கள்
மின்னிக்காய் பச்சையாகவே பறித்து உண்ணலாம். முள்ளிக்காய் எனும் முள்ளுச்செடி
செய்யும் உணவும். மரசெக்குகள் கல் செக்குகளாயின என்றாலும் அதன் உலகை மரத்தடியே
(தடியன்) பருத்தியிலுருந்து கொட்டையையும் பஞ்சையும் பிரிக்கும் ராணம் என்கிற இயந்திரம்
முழுவதும் மரத்தினால் ஆனதே
தேன் இரும்பு எனும் இரும்பு ரகம், balbaring செய்ய தேவையான இரும்பின் ரகம் விளக்கங்கள்
காலையில் விடிந்ததும் புறாக் கூண்டுகளை திறந்துவிடுவான். அவைகள் நேராக துறைமுகத்துக்குப்
பறந்து செல்லும். அரிசி மூடைகள் பாட்டியல் போட்டு வைக்கப்பட்டிருக்கும் அரிசி மூடைகளின்
சுற்றப்புறங்களில் சிந்திச்சிதறிய அரிசிகளை புறாக்கள் பொறுக்கி இரைப்பையை நிரப்பிக் கொண்டு
தண்ணீர் குடிக்க இவனுடைய வீட்டுக்கு வரும். இவன் மரபு பத்தாயங்களில் புறாக்கள் குடிக்க
தயாராகத் தண்ணீர் நிறைத்து வைத்திருப்பான். அந்தப் பச்சிலை கலந்த தண்ணீரைக் குடித்தவுடன்
வாந்தி பண்ணும். அந்த அரிசி போராவும் அவனுக்கே. எடுத்து அலசி காயவைத்துக் கொள்வான்.
மறுதடவை கொண்டு வரும் அரிசிகள் அனைத்தும் புறாக்களுக்கு (பச்சிலை கலக்காத
தண்ணீர் இருக்கும்
நிலத்தை அடையாளப்பட்டு அழைத்தது காரணப் பெயர்கள். நாடுவோடைபுஞ்சை, குட்டவெளிப்
புஞ்சை, பாறையடிப் புஞ்சை, மதுரைவழிப் புஞ்சை, வன்னிமரப்பூஞ்சை, குட்டவெளிப் புஞ்சை என
விளக்கும் தகவல்கள். குருவய்ய நாயக்கருக்கு ஏற்பட்ட நிலைமையை விளக்கும் விதம்
என விறு விறுவென்று நகர்ந்து வந்தது.
போட்டோ எடுத்தா ஆயுசு குறைவு என்ற கருத்தைப் போலவே பல்லு கட்டியவர்களுக்கு
இறந்தவர்களின் பற்களைத்தான் கட்டுவார்களாம் ஏனென்றால் அவர்கள் பக்கத்தில் வரும்போது
எடுக்கும் நாத்தம் தான் ——–எவ்வளவு யோசிச்சிருப்பாங்க
அந்த காலத்தில் கல்யாணத்திற்கே பருப்பு சாதம் தான் பிரதான உணவு. எப்போ எங்களுக்கு பருப்பு
சோறு போடப் போறீங்க என்று கேட்டால் “கல்யாண சாப்பாடு” எப்போ என்று தான் அர்த்தமாம்
அடைமலையில் திருக்குற்றால நாதனுக்கு – ராத்திரி பூஜையின் பொது – சுக்கு வென்னி
உண்டு தெரியுமோ ? ஊர்க் கல்யாணங்களில் ஒரு பால்மரத்தின் கிளை ஒன்றினை நட்டி –
மணமகன் நட்ட மணமகள் நீர் ஊற்ற: முடிந்த பிறகே தாலிகட்டுவது நடக்கும்
உடம்பை முறித்துக் கடம்பையில் கிடைத்து, அவிழ்த்து விட்ட குதிரை மணலில் படுத்துப்
புறண்டு புறண்டு எழுந்திருப்பது போல கடம்பைப் பலகையில் இந்த மனுசக் கட்டையைப்
போட்டு புறட்டிப்புறட்டி எழுந்தால் உடம்பு சொடுக்குப் போட்டது போல இருக்குமாம்
உணவு உண்ணம்போது உப்புக் குறைவாக இருந்தால் உப்பாக எடுத்துக் போட்டுக் கொண்டால்
கூடும் அல்லது குறையும். அந்தக் கைமாறவை நமக்கு சொட்டு நீராக உப்பைத் தருவதால்
பொருத்தமாக அமைகிறது. வாழ்ந்து அனுபவித்தவர்கள் செய்கை
மிளகாய் செடியுடன் துளசி செடியை நட்டால் நன்றாக பூ பிடித்து செழிப்பாக வளரும்
தாவரங்களிலில் நட்பு செடி, விரோதச் செடி என்று இருக்கும்
கடைசியாக பொத்தய்யத் தாத்தாவின் வாழ்ந்து கெட்ட கதை என நன்றாக வாழ்ந்து அனுபவித்து
முடிந்த தாத்தாக்களின் கதை உணவு, விவசாயம், தன்னை சுற்றி உள்ள பொருட்களை
ஆளும் திறன், இயற்கையும் சூழலையும், விலங்குகளையும் நேசிக்கும் பாங்கு என
அடுத்த தலைமுறைக்கு எட்டாத கனவு வாழ்க்கையை கதையாக இருக்கிறது
இந்த மனுஷங்க புத்தகம்
நன்றி