Aasai kavidhaigal
சும்மாத்தான் பாருமய்யா! ஈழத்தின் நாட்டுப்புறத்தில் கன்னி ஒருத்தி குளத்தில் தண்ணீர் அள்ள வருவாள். அவள் வரும் வழியில் இருந்த வீட்டில் வாழ்ந்த ஓர் இளைஞனைக் காதலித்தாள். ஆனால் அவன் அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. காலங்கள் உருண்டன. அவனிடம் தன் எண்ணத்தைச் சொல்ல நினைத்தாள். அதற்கான நேரமும் அவளுக்குக் கிட்டியது. அப்போது பெண்: கழுத்தைத் திருப்பிக் கொண்டு கதையாமல் போறவரே சுழுக்கெடுக்க நான் வரட்டா சும்மாத்தான் பாருமய்யா – நாட்டுப்பாடல் (ஈழம்) – (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) என்று சொன்னாள். ஆனால் அவளது மன எண்ணத்தைச் சொல்லவிடாது நாணம் தடுத்தது. இப்படிக் கேட்டதற்கே அவன் என்ன நினைப்பானோ என திகைத்து நின்றாள்.
Reviews
There are no reviews yet.