நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்

Publisher:
Author:
Translator:

120.00

நீலகிரி
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்

120.00

Neelagiri: Pathonbatham Nootrandil Sivasamuthiram Mattrum Neelagiri Payana Kurippugal 

 

1834இல் இந்தியாவில் இருந்து திரும்பி இங்கிலாந்து செல்லும் பயணத்தின் போது , நீலகிரி பற்றிய தனது நினைவுகளை பதிவு செய்கிறார் லெப். ஜெர்விஸ். ஆங்கிலேயர்கள் நீலகிரியைக் கண்டறிந்து பதினைந்து வருடங்களே ஆகியிருந்தன. நீலகிரிக்குச் செல்லும் வழி, தங்கும் இடங்கள், அங்கு பார்க்கக் கூடியவைகள், வேட்டையாட வேண்டிய விஷயங்கள் என பலவற்றையும் தொட்டுச் செல்கிறார். இன்றைய நமது ‘ஊட்டி’ சுற்றுலாவிற்கும், இங்கு ஜெர்விஸ் விவரிக்கும் நீலகிரிக்கும் சிறிதும் சம்பந்தமில்லாதது. எந்த அளவிற்கு நாம் இந்த இடத்தை மாற்றிவிட்டோம் என்பதை வருத்தத்துடன் உணர வைக்கின்றது. இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணமாக, நாம் காக்க மறந்துவிட்ட நமது நாட்டின் வளங்களின் எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன.

ஜெர்விஸ் ஓர் ஓவியர். எனவே , புத்தகத்தில் அவர் வரைந்த பல படங்களும் , அவைக் குறிக்கும் இடங்களும் பற்றி உற்சாகமாகப் பேசுகிறார். இறுதியில் சிறுகுறிப்பாக, வேறுசில இடங்களை அவர் வரைந்த படங்களும், குறிப்புகளும் இருக்கின்றன.

Delivery: Items will be delivered within 2-7 days