Karichchan Kunju Sirukadhaikal
1943 – 1983 கால அளவில், ‘கிராம ஊழியன்’ முதல் ‘அமுதசுரபி’ இதழ் முடிய கரிச்சான் குஞ்சு எழுதிய – தொண்ணூற்றொன்பது சிறுகதைகளின் காலவரிசைத் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது. பல்வேறு பழைய இதழ்களிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட இருபத்தைந்து சிறுகதைகள் முதன்முறையாக நூல்வடிவில் பிரசுரம் பெறுகின்றன. வாழ்வின் தீர்மானிக்க முடியாத கணங்களால் உருவான உணர்ச்சிகளே இக்கதைகள். லௌகீக வாழ்வின் அபத்தங்களைக் காட்டும் மாய வித்தைக்காரனாகவும், சிறுகதைகளின் சூட்சுமங்களை வெளிப்படுத்திய கலைஞனாகவும் கரிச்சான் குஞ்சு அடைந்த வெற்றியின் சான்று இச்சிறுகதைத் தொகுப்பு.
Reviews
There are no reviews yet.