1 review for தேவரடியார் கலையே வாழ்வாக…
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹250.00.₹235.00Current price is: ₹235.00.
சங்க காலம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் நடனம், இசை, ஓவியம், சிற்பம் ஆகிய கலை வடிவங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றன. தமிழகக் கலைகள் கோயில் சார்ந்தே இயங்கி வந்திருக்கின்றன. கோயில் என்ற நிறுவனம் உருவாகி வளர்ந்தெழுந்தபோது, கடவுளர்கள் ஆர்ப்பாட்டமான வழிபாட்டுக்குரியவர்களாக மாற்றப்பட்டார்கள் இசையும் நடனமும் மங்கலகரமானவையாகக் கருதப்பட்டன. கடவுள்களைப் புகழ்ந்தும், அவர்களின் மகிமைகளை வெளிப்படுத்தவும் பதிகங்களும் பாசுரங்களும் பாடப்பட்டன. வழிபாட்டின் ஓர் அங்கமாகக் கோயில்களுக்குப்
பெண்கள் நேர்ந்துவிடப்பட்டார்கள். கோயில்களில் இறை சேவைக்காக நேர்ந்துவிடப்பட்ட தேவரடியார் பெண்கள் கலைகளைக் கற்றுத் தேர்ந்து வளர்த்து வந்திருக்கிறார்கள். நீண்ட நெடிய கலை மரபில் தேவரடியார்களின் பங்களிப்பைப் பல தளங்களில் இந்நூல் விரிவாக ஆராய்கிறது.
Delivery: Items will be delivered within 2-7 days
ART Nagarajan –
தேவரடியார்
கலையே வாழ்வாக
அ.வெண்ணிலா
அகநீ
சங்க காலம் தொடங்கி,
இருபதாம் நூற்றாண்டின்
இறுதி வரை தமிழகத்தில்
நடனம், இசை, ஓவியம்,
ஆகிய தமிழகக் கலைகள்,
கோயில்கள் சார்ந்தே இயங்கி வந்திருக்கின்றன.
பெண்களை கோயிலுக்கு தேவரடியார்களாக நேர்ந்து விடப்பட்டார்கள் என்று
பொத்தாம் பொதுவாக நூலாசிரியர் சொல்லிச் செல்கிறார்.
அது ஏன் என்பது
விவாதத்துக்கு உரியதாகவே படுகிறது.
தலைக்கோல் பட்டம் வாங்கிய மாதவியை தினமும் 1008 பொன்கழஞ்சு கொடுப்பவர் கூட்டிச்செல்லலாம் என்று சோழமன்னன் ஆனை என்றே மாதவியின் தோழி ஏலம் விடுகிறாள்.
உலகிலேயே முதன்முதலாக தேவரடியாருக்கு (மாதவி)
ரேட் (RATE CARD) தீர்மானம் செய்த அரசு சோழ அரசு என்பதை பதிவு செய்திருக்கலாம்.
தேவதாசிகள் திருமணம்
செய்து கொண்டதையும்,
தேவதாசிகள் எல்லா சாதியைச் சார்ந்தவர்களாகவும் இருந்தார்கள் என்பதையும் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.
1947ல் தேவரடியார் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது
என (பக்கம் 239) ஒரு வரியில் சொல்லிச் செல்கிறார். அது
வரலாற்றில் மிக நீண்ட போராட்டம்.
ஆறாம் நூற்றாண்டு முதல் சோழர்களால் நிறுவனமயமாய் ஆக்கப்பட்டப்பட்ட
பெண்ணடிமைத் தனத்தை ஒழிக்க பெரியார் நடத்திய போராட்டத்தில் மூவாளுர் ராமாமிர்தம் அம்மாள் அவர்களின் பங்கு போற்றுதற்குரியது.
தமிழக சட்டமன்றத்தில்
சத்தியமூர்த்தி அய்யரிடம் தேவதாசி ஒழிப்புச் சட்டம் சம்பந்தமாக
முத்துலெட்சுமி அம்மாள்
நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பொருள் பொதிந்த வாதத்தை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
அதன் பின்னர் தான் சட்டமாக்கப்பட்டது என்பதையும்,
அதன் பின்னணியில் தந்தை பெரியார் இருந்ததையும் தெரிவித்திருக்க வேண்டும்.
தேவரடியார்களின்
வாழ்வும், பணியும், மன்னர்களாலும்,
கோயில் நிர்வாகங்களாலும் சீரழிக்கப்பட்டது
என்பதே உண்மை.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART.நாகராஜன்
புத்தக வாசல், மதுரை.