‘மார்க்சியம் – இன்றும் என்றும்’ என்ற தலைப்பில் சுமார் 900 பக்கங்கள் கொண்ட மூன்று தொகுதிகள் அடங்கிய புத்தகம் வெளியிட்டுள்ளது.
முதல் தொகுதியில் 1848-ல் மார்க்ஸ் – ஏங்கல்ஸ் இணையர் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ எப்படி தற்போதைய சூழலுக்கும் பொருந்தும் ஒன்றாக இருக்கிறது என்பதை பத்திக்குப் பத்தி விளக்கி எழுதியிருக்கிறார் எழுத்தாளர் பில் கஸ்பர். இந்தக் கருத்து சார்ந்து கிரீஸ் நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் யானிஸ் வரோஃபகீஸ் எழுதிய கட்டுரையும் சேர்க்கப்பட்டுள்ளது. அதைத் தமிழில் கே. பாலசுப்பிரமணியன் மொழிபெயர்த்துள்ளார்.
இரண்டாவது தொகுதி ஒரு சுவாரஸ்யமான வெளியீடு. மார்க்ஸ் எழுதிய மூலதனத்தின் முக்கியக் கூறுகளை மையமாகக் கொண்டு, அதற்கு ஆங்கிலத்தில் சித்திர (காமிக்ஸ்) வடிவம் கொடுத்திருக்கிறார் டேவிட் ஸ்மித். இதை ச.பிரபுதமிழன் மற்றும் சி.ஆரோக்கியசாமி தமிழாக்கம் செய்திருக்கிறார்கள்.
“உழைப்பு, உழைப்பால் உருவாகும் உறவுகள், பண்டம், உபரி மதிப்பு, மூலதனப் பெருக்கத்துக்கான காரணிகள் போன்ற கோட்பாடுகளை எளிமையாக எடுத்துரைக்கும் வண்ணம் இத்தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் இந்நூலை மொழிபெயர்த்தவரில் ஒருவரான ச.பிரபுதமிழன்.
இவ்வரிசையின் கடைசித் தொகுப்பு, பரிதி எழுதிய ‘மாந்தர் கையில் பூவுலகு’ என்னும் சூழலியல் பற்றிய புத்தகம். நம் காலத்தின் மிக முக்கிய விவாதப்பொருளாக வடிவெடுத்துள்ளது சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள். இப்பொருளை எடுத்து விவாதிப்போர் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சட்டகத்துள் அடைபட்டுக் குறுகிய தீர்வுகளை முன்மொழிபவர்களாகவே இருக்கின்றனர்.
‘ஒரு வீட்டில் உருவாகும் கழிவுகளைத் தரம் பிரித்தல், ஆங்காங்கு மரங்களை நடுதல், நெகிழிப் பைகள் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்’ ஆகியவற்றால் சுற்றுச்சூழலை மேம்படுத்திவிடலாம் போன்ற பிரச்சாரங்கள் எவ்வளவு மேம்போக்கானவை எனவும், அவை சூழலியல் பிரச்சனைகளுக்கான அடிப்படைக் காரணங்களில் இருந்து எப்படி விலகிச் செல்லவே உதவும் என்றும் புள்ளிவிவரங்களுடன் இந்நூல் வாதிடுகிறது.
“இதற்கு முன் வந்த மார்க்சியம் தொடர்பான நூல்கள் அறிவுஜீவிகள், ஆய்வாளர்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் மொழியில் எழுதப்பட்டது. அனால் இந்தத் தொகுப்பு உருவாகும் போதே அனைவரும் புரிந்து கொள்ளும் மொழியில் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். அதற்குக் கடினமான உழைப்பும் நேரமும் தேவைப்பட்டது. பொதுவாக மார்க்சியம் என்றாலே புரிந்துகொள்வது கடினம்; நிறைய படித்தவர்களுக்கு தான் புரியும் என்ற மாயையை இந்த புத்தகம் உடைத்தெறியும்” என நம்பிக்கை தெரிவித்தனர் பதிப்பகத்தார்.
நன்றி – மின்னம்பலம்

தமிழரா? திராவிடரா?
தூறல் நின்னு போச்சு
பிராந்தியம் (திரை நாவல்)
கீதையின் மறுபக்கம்
தலித் பொதுவுரிமைப் போராட்டம்
கடல்
தீர்ப்பு?
தேவை பாலியல் நீதி
ஏவாளின் நாட்குறிப்பு: மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது
பௌத்த தியானம்
நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்
மகாத்மா காந்தி
ஒரு கலை நோக்கு (ஆளுமைகள் தோழமைகள்)
ராமாயணம் எத்தனை ராமாயணம்
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
எறும்புகள் ஈக்கள் – சிறு உயிர்கள் அறிமுகம்
வந்தாரங்குடியான்
இண்டமுள்ளு
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
காந்தியைச் சுமப்பவர்கள்
ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்...
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
பெண் மணம்
சாதியம்: கைகூடாத நீதி
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
என்னைத் திற எண்ணம் அழகாகும்
ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்
திட்டமிட்ட திருப்பம்
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
மொழி உரிமை
தப்புத் தப்பாய் ஒரு தப்பு
இறையுதிர் காடு (இரு பாகங்கள்)
லடாக்கிலிருந்து கவிழும் நிழல்
லெனின் வாழ்வும் சிந்தனையும்
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
கருங்குயில்
தென்னாடு
பொய்த் தேவு
ஆடு ஜீவிதம்
பட்டக்காடு
கவர்ந்த கண்கள்
ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்
நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை
பிரேதாவின் பிரதிகள்
இராமாயண காவியம்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்
பாரதியும் ஜப்பானும்
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
எரியாத நினைவுகள்
காற்றில் கரையாத நினைவுகள்
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது
உழவர் குரல்
உணவே மருந்து
அவளை மொழிபெயர்த்தல்
ராணியின் கனவு
தமிழ் இரயில் கதைகள்
கற்பித்தல் என்னும் கலை
எது தர்மம்
கல்வி முறையும் தகுதி திறமையும்
மனவாசம்
நீல நாயின் கண்கள்
பெண் ஏன் அடிமையானாள்? (HB)
ஊருக்கு நல்லதை சொல்வேன்
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
நோம் சோம்ஸ்கி
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு
தமிழகத்தில் ஆசீவகர்கள்
புன்னகைக்கும் பிரபஞ்சம்
ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஒரு சமர்
இராஜராஜேச்சரம் குடமுழுக்கு
உன்னை நான் சந்தித்தேன்
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
மூவர்
காலத்தின் சிற்றலை
நேர் நேர் தேமா
பகவதி கோயில் தெரு
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
நிழலைத் துரத்துகிறவன்
செம்மீன்
எம்.எல்.
தொல்காப்பியப் பூங்கா
போதையில் கரைந்தவர்கள்
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)
தனித்தலையும் செம்போத்து
உலோகருசி
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
ஈரம் கசிந்த நிலம்
இன்னா நாற்பது
மதவெறியும் மாட்டுக்கறியும்
போர் இல்லாத இருபது நாட்கள்
தித்திக்கும் திருமணம்
குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
காதல்: சிகப்பு காதல்...
கிளர்ச்சியின் நகரங்கள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
தலித்தியம்
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
கதவு
தலைகீழ் விகிதங்கள்
இராமாயணம் - வால்மீகி
அற்புதமான களஞ்சியம்
இளைஞர்க்கான இன்றமிழ்
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
நாங்கூழ்
காயப்படும் நியாயங்கள்
ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
சீர்மல்கு காரைக்கால்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
Caste and Religion
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்? 
Kathir Rath –
#மார்க்சியம்_இன்றும்_என்றும்_மூலதனம் (சுருக்கமான சித்திர வடிவில்)
காரல்மார்க்ஸ்
மனித குலத்திற்கான சிந்தனையாளர் காரல்மார்க்ஸ் அவர்களின் பிறந்த தினத்தில் இப்புத்தகம் பற்றி எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அதிலும் உழைப்பாளர் தினமான மே 1 அன்று துவங்கி மார்க்சின் பிறந்த தினத்தில் முடித்ததை தனி மகிழ்ச்சி.
சிவாஜி படத்தில் இந்தியாவில் இருக்கும் கருப்பு பணத்தை லேப்டாப்பில் பார்த்து விட்டு இரஜினிகாந்த் “Rich get richer, poor get poorer” என்பார். மிக துல்லியமான வசனம் அது. ஆனால் அதை பற்றி தேடி பார்த்தால் அது 200 ஆண்டு பழமையான வசனம் என்பது தெரிய வந்தது. பல இடங்களில் பயன்படுத்தப்பட்ட வசனத்தை கேள்வியாக பார்த்தவர் காரல்மார்க்ஸ். ஏன் பணக்காரன் மட்டும் மேலும் பணக்காரனாகிறான், ஏழை எப்படி மேலும் ஏழையாகிறான்? இந்த தலைமுறை தலைமுறையான உழைக்கும் வர்க்கத்தின் வறுமை நோயை பற்றி ஆய்வு செய்கிறார். அதற்காக தன் வாழ்வு முழுவதையும் செலவிடுகிறார். அதில் தான் கண்டறிந்த்தை “மூலதனம்” என்ற நூல் தொகுப்பாக வெளியிடுகிறார். முதல் பாகம் வெளியாக மட்டும் 16 ஆண்டுகள் செலவிட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அதன் சுருங்கிய வடிவமான கிராண்ட்சே வெளியாகி மிகுந்த வரவேற்பினை பெற்றிருந்தது.
மூலதனம் நூலை முடிந்த வரை சுருக்கமாக வெளியிட, அதை படித்து நான் புரிந்து கொண்டதை என் பார்வையில் சொல்கிறேன். பிழையிருப்பின் சொல்லுங்கள் கற்றுக் கொள்கிறேன்.
முதலில் வேட்டையாடி சமூகமாக வாழ்ந்து, பின்னர் விவசாயிகளாக நிலைபெற்று நாகரீக மனிதனாக மாறிய பின், மனிதர்களுக்குள் தங்கள் தேவைகளுக்கு தங்களிடம் இருந்த பொருட்களை பண்டமாற்று முறையில் கொடுத்து தேவையான பொருட்களை வாங்கி கொண்டனர். இது எப்போதும் சமமான அளவில் இருக்கும் என்று சொல்ல முடியாது. தங்ககட்டிக்கு ஈடாக எவ்வளவு உப்புக்கட்டியை கொடுப்பது என எப்படி தீர்மானிப்பது? அது தேவைக்கேற்றவாறு மாறிக் கொண்டே இருக்குமே. இதை அரிஸ்டாட்டில் தனது செல்வ இயல் என்ற நூலிலும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் பணம் என்ற ஒன்று கண்டறியப்படுகிறது. பேராண்மை படத்தில் சொல்வது போலத்தான். அதுவரை C-C என்று இருந்த பண்டமாற்று முறை, C-M-C என்று மாறுகிறது. பொருளை ஒரு குறிப்பிட்ட பணத்திற்கு விற்று, அதை வைத்து வேறு பொருளை வாங்குவது. இதுதான் பணத்தின் வேலையாக இருந்தது. அடுத்து அந்த பணத்தை அதிகம் சேர்ப்பதற்கான வேலைகள் துவங்கின. திருட்டு முதல் ஊழல் வரை பல முறைகள் இருந்தாலும் மூலதனம் பேசுவது முதலாளித்துவத்தின் திருட்டை பற்றி மட்டும்தான்.
ஆரம்ப காலத்தில் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் உற்பத்தியாளராக இருந்தார்கள். மிகவும் குறைந்த தேவைக்காகவே பண்டமாற்றில் கூட ஈடுபட்டார்கள். அனைவரிடமும் இருந்த நிலம் என்னும் அதிகாரம் பல வகைகளில் பறிமுதல் செய்யப்பட்டது. காலணியாதிக்கம், அதிக வரிவசூல், முதலீட்டிற்கு வழியற்ற நிலை, பஞ்சம் என ஒவ்வொரு காரணத்தாலும் அறியாமையாலும் நிலமும் வளமும் ஒரு கூட்டத்திடம் போய் சேர்ந்தது. இதற்கு உலகம் முழுக்க அனைத்து அரசாங்கமும் துணையாய் இருந்தது தான் முதல் காரணம்.
நவீன தொழில்பாணிக்கு முன்பு அடிமை, பண்ணையடிமை என பல வகைகளில் உழைப்பு சுரண்டப்பட்டாலும் அவை முதலாளித்தவ சுரண்டலில் வராது் ஏனென்றால் அவை முழு அடிமைதனங்களில் மனித உரிமைக்கு எதிரான செயல்களில் வந்து விடும்.
ஒரு தொழில் துவங்க இயந்திரம் அல்லது நிலம் என ஏதாவது ஒரு உயிரற்ற பொருளினை பணத்தின் மூலம் வாங்கி விட்டு, அதில் உழைக்க மனிதர்களை கூலிக்கு ஒப்பந்தம் செய்வதில் துவங்குகிறது முதலாளித்துவம். நன்றாக கவனித்து கொள்ளுங்கள், பணம் வைத்திருக்கும் அனைவரையும் முதலாளிகளாக கூற இயலாது. அவர் ஒரு தொழிலில் மூலதனமாக பணத்தை செலவிட்டு அதன் மூலம் லாபம் ஈட்டுபவராக இருக்க வேண்டும்.
அதாவது M-C-M1, M அளவு பணத்தை கொண்டு M1 அளவு அதிக பணத்தை ஈட்டுபவராக இருக்க வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் உபரி பணம் லாபமாக அவர் கைக்கு வர அதை வைத்து மீண்டும் முதலீடு செய்வார் M1-C-M2. இப்படி தொடர்ச்சியாக அவரது பணம் அதிகரித்துக் கொண்டே செல்லும் எனபதுதான் முதலாளித்துவத்தின் மைய சூத்திரம்.
இதில் என்ன தவறு இருக்கிறது? பணத்தை முதலீடு போட்டவனுக்கு இலாபம் கிடைப்பது குற்றம் இல்லையே என்று தோன்றும். அந்த இலாபத்திற்காக என்னென்ன செய்யப்பட்டது, செய்யப்படுகிறது என்பதில் தான் சிக்கல் இருக்கிறது.
அவரது முதலீடு, அதாவது மூலதனம், அந்த பணம் இரண்டு வகைகளில் செலவிடப்படும். ஒன்று நிலையான மூலதனமாக, அதாவது நிலமாக, இயந்திரமாக செலவிடப்படும். இன்னொரு பாதி மாறும் மூலதனம் அதாவது உழைப்புத்திறனுக்காக செலவிடப்படும். உதாரணத்திற்கு ஒரு தையல் இயந்திரம் நிலையான மூலதனம், தையல்காரருக்கான சம்பளம் மாறும் மூலதனம். சட்டை தைத்து விற்று இலாபம் பார்ப்பார் முதலாளி.
அவரை பொறுத்த வரை தையல் இயந்திரமும் பண்டம்தான், தையற்கார்ரின் உழைப்பும் பண்டம்தான். ஆனால் நிதர்சனம் அதுவல்லவே. தையல் இயந்திரத்தின் தேய்மானம் கணக்கிடப்பட்டு துணியின் அடக்கவிலையில் வைத்து விற்கப்படுவதனை போல தையல்காரனின் உழைப்பு மதிப்பிடப்படுவதில்லை.
இதனை புரிந்து கொள்ள ஒரு பொருளுக்கான விலை நிர்ணயம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு செய்யப்படும் செலவுடன் இலாபம் வைத்து மட்டும் விலை நிர்ணயிக்கபடுவதில்லை. சமூகத்தில் அது கிடைக்கும் விலைகளின் சராசரியாகத்தான் விலை இருக்கும். உதாரணத்திற்கு ஒரு டீ 10 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றால் ஒருவரால் 100₹ க்கு அதே தரத்தில் விற்கமுடியாது. விற்பனை இல்லாமல் நட்டமடைவார். அப்படி போட்டி வியாபாரிகளின் விலையை பொறுத்தே பண்டத்தின் விலை நிர்ணயிக்கப்படும்.
இலாபம் கிடைக்க இரண்டு வழிதான் இருக்கிறது. ஒன்று மூலப்பொருள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்.அல்லது விற்பனை விலை அதிகமாக இருக்க வேண்டும். போட்டி வியாபார உலகில் விலையை ஒருகட்டத்திற்கு மேல் அதிகரிக்க இயலாது. அப்படி போட்டியற்ற நிலையும் ஏகாதிபத்திய காலணியாதிக்க நாடுகளில் முற்றுரிமை சட்டத்தினை கொண்டு நடத்தினார்கள் அதை பற்றி வேறு சமயத்தில் பார்ப்போம். விற்கையில் கிடைக்கும் லாபத்தை அதிகரிக்க இயலாத பட்சத்தில் முதலாளிகள் உற்பத்தியில் செலவை குறைக்க முயல்வார்கள்.
இரண்டு வகை மூலதனத்தில் இயந்திரங்களுக்கான செலவில் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் உழைப்பு திறனை மலிவாக பெறலாம். அதற்கு பல வழிகள் உள்ளன. அதில் சில குறிப்பிடுகிறேன்.
1. குறைந்த கூலிக்கு தொழிலாளர்களிடையே போட்டி ஏற்படுத்தலாம். வேலையில்லாத காலத்தில் இது பெரும் லாபம் தரும் வழியாக இருக்கும்.
2. மலிவான மனித வளத்தை பயன்படுத்தக்கூடிய இடங்களில் தொழலினை நடத்தலாம். இந்தியா & சீனா போன்ற நாடுகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
3. தொழிலாளிகளிம் கூலியற்ற உழைப்பை பெறலாம்.
இந்த கூலியற்ற உழைப்புதான் மூலதனத்தை பெருக்கும் பெரிய குறுக்கவழி.
உதாரணத்துடன் சொன்னால் விளங்கி கொளற இயலும்.
ஒரு சட்டையை தைக்க 4 மணி நேரம் ஆகும். ஒரு சட்டைக்கான கூலியை ஒரு நாள் சம்பளமாக கொடுத்து விட்டு 8 மணி நேரம் வேலை வாங்கினால் 2 சட்டை கிடைக்கும். அப்போது லாபம் 100% ஆகிறது. அதே வேலைநேரத்தை 12 மணிநேரமாக அதிகரித்தால் 200% லாபம் முதலாளிக்கு.
அதே தொழிலாளிக்கு ஞாயமான கூலி மறுப்பதுடன் அதிக உடல் உழைப்பினால் உடலும் மனமும் சேர்ந்து பாதிக்கப்பட்டு தொடர்ச்சியாக அவனது உழைப்புத்திறனே குறைந்து விடும். அது முதலாளிக்கு பிரச்சனையில்லை. அடுத்த தொழிலாளியை வேலைக்கு அமர்த்தி கொள்ள முடியும்.
இப்படிப்பட்ட உழைப்பு சுரண்டலில் இருந்து மீட்கத்தான் வேலை நேரம் 8 மணிநேரமாக போராடி பெறப்பட்டது. ஆனாலும் முதலாளிகளின் சுரண்டல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
முதலாளித்துவத்தின் ஆகப்பெரும் பலமே உழைப்பை பண்டம் போல விலைக்கு வாங்க முடிவதுதான். நீங்கள் என்ன படித்திருந்தாலும் உங்கள் உழைப்பிற்கு ஒரு விலை வைக்க முதலாளித்துவத்தால் முடியும். அதன் மூலம் பல மடங்கு லாபம் அவர் பெறுவது தெரிந்தாலும் தொடர்ந்து உழைக்க யாரும் தயங்குவதில்லை. இதை புரிந்து கொள்ள மார்க்சை வாசிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஏனென்றால் ஏதோ உழைப்பு சுரண்டப்படுதல் என்றால் காக்கி சட்டை போட்டு கொண்டு பேக்டரிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டல் மட்டுமல்ல. முதலில் அடிமைமுறையில் மொத்தமாக சுரண்டிய முதலாளித்துவம் அடுத்து உபரி உழைப்பை திருடியது. அதை மக்கள் உணர்ந்ததும் அடுத்தக்கட்ட திருட்டுக்கு மாறிவிட்டது.
எப்படி என்றால் முன்பு போல ஒரு சட்டைக்கு பணம் கொடுத்து 2 சட்டை தைக்க வைக்க இயலாது. அதற்கு பதிலாக இத்தனை எண்ணிக்கை வரை குறிப்பிட்ட கூலி, அதற்கு மேல் என்றால் ஊதிய உயர்வு என்று குதிரை முன்பு கேரட்டை தொங்க விடுகிறது. இப்போதைய கார்ப்பரேட்டுகளின் பாணி இதுதானே?
மேலும் முன்பு போல வேலை நேரத்தில் மட்டும் வேலை என்பதை மாற்றி எந்நேரமும் வேலையை பற்றியே சிந்திக்கும் நவீன அடிமை முறையை உருவாக்கிவிட்டது. அதாவது டார்கெட்டை கொடுத்து முடிக்க பணிப்பது.
காலம் காலமாக தன்னை பரிணமித்துக் கொள்ளும் முதலாளித்துவம் இப்போது இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. எப்படி என்றால் இப்போது பெரும் முதலீடு செய்தாலும் அதற்கேற்ற இலாபம் குறித்த காலத்தில் வராத சூழல் வந்துவிட்டது. அதனால் உலகம் முழுவதும் பணமானது மூலதனமாக மாற்றப்படாமல் தொழில்வளர்ச்சி தேங்க துவங்கிவிட்டது. உச்சியை அடைந்து விட்டோம். இனி இறக்கம்தான் என்கிறார்கள் சிலர். பார்ப்போம் அப்போதாவது மாற்றம் நடக்கிறதா என்று.
உண்மையில் இந்த புத்தகத்தில் இருப்பதை நோட்ஸ் எடுத்து விரிவாக எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் எழுத துவங்கி நான் பாட்டிற்கு எழுதி விட்டேன். நிறைய விசயங்கள் இருக்கின்றன. அதை வாசித்தல் மூலமும் உரையாடல் மூலமும்தான் புரிந்து கொள்ள முடியும். இறுதியாக மார்க்சின் வரிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.
“… தொழிலாளர் வர்க்கம் இந்த அன்றாட போராட்டங்களே இறுதி செயல்பாடு என்று மிகையாக கருதிக் கொள்ளக்கூடாது. அவர்கள் விளைவுகளை எதிர்த்துத்தான் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த விளைவுகளில் காரணங்களை எதிர்த்து அல்ல என்பதை அவர்கள் மறந்து விடக் கூடாது .அவர்கள் நோயின் வலிக்குத்தான் தைலம் பூசி கொண்டிருக்கிறார்கள், நோயைத் தீர்ப்பதற்கு அல்ல. பழமைவாத குறிக்கோளான “நியாயமான வேலைக்கு நியாயமான கூலி” என்பதற்கு பதிலாக அவர்கள் தங்களுடைய பதாகையில் “கூலி முறையை ஒழிப்போம்” என்கிற புரட்சிகர லட்சியம் முழக்கத்தை ஏந்த வேண்டும்”