1801 – நாவல்
இந்திய சுதந்திர வரலாற்றில் விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருது பாண்டியர்கள், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாய்க்கர், தீரன் சின்னமலை உள்ளிட்ட போராளிகளே.
தென்னிந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801-ஆம் ஆண்டு நடத்திய போராட்டமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாகும். ஆங்கிலேயர்கள் மிக அதிகமான மனித இழப்புகளை சந்தித்ததும் இந்தப் போர்க்களத்தில்தான். இந்திய விடுதலைப் போராட்டக்காரர்கள் முதன்முதலில் நாடுகடத்தப்பட்டதும் இப்போரில் தான்.
உலகம் முழுக்க நடந்த விடுதலைப் போர்களின் விழுச்சிக்குப் பல காரணங்கள் இருந்துள்ளன. தென்னிந்திய விடுதலைப் புரட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது சில தனி நபர்களின் துரோகம் மட்டுமே. சில நூறு பணங்கள், சிறு துண்டு நிலம், ஆசை வார்த்தைகள், அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு என ஆங்கிலேயர்கள் விரித்த வலையில் விழுந்து துரோகிகளாக மாற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.
முதல் இந்திய சுந்தந்திரப் போரின் எழுச்சி, வீழ்ச்சி, 18 – ஆம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை, பிரிட்டிஷ் இந்தியக் கால தமிழகம், ஆங்கிலேயர்களின் இந்திய வாழ்க்கை எனப் பல்வேறு கதைக்களன்கள் விவரிக்கப்பட்ட நாவலே ’1801.

One Hundred Sangam - Love Poems
மாபெரும் தமிழ்க் கனவு
1975
English-English-TAMIL DICTIONARY
5000 GK Quiz
5000 பொது அறிவு
Moral Stories
Arya Maya (THE ARYAN ILLUSION)
Quiz on Computer & I.T.
2600 + வேதியியல் குவிஸ்
Mother
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
Caste and Religion
English-English-TAMIL DICTIONARY Low Priced
PFools சினிமா பரிந்துரைகள்
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
COMPACT Dictionary [ English - English ]
2400 + Chemistry Quiz
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
ARYA MAYA - The Aryan Illusion
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
18வது அட்சக்கோடு
2700 + Biology Quiz
RSS ஓர் அறிமுகம் 
Kmkarthi kn –
1801
மு.ராஜேந்திரன்.இ.ஆ.ப
அகநி வெளியீடு.
சென்ற ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்கான போட்டியில் சூல் நாவலுக்கும் இந்த 1801 எனும் நாவலுக்கும் இடையே பலத்த போட்டியிருந்தது என்ற செய்தியின் காரணமாக ஈர்க்கப்பட்டே இந்த புத்தகத்தை வாங்கினேன். இந்த புத்தகத்தை வாசிக்க கையில் எடுக்கும் வரையிலுமே இந்த புத்தகம் எதைப்பற்றியது என அறியாதவனாகவே இருந்தேன். அதனாலயே இதை வாசிக்க இத்தனை தாமதமாகிவிட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிடுவதிலிருந்து நாவல் ஆரம்பமாகிறது. அப்போதே நாவலின் போக்கை நமக்கு தெளிவாக உரைத்துவிடுகிறார். 1801 ம் ஆண்டு சிவகங்கைச் சீமையில் காளையார் கோயில் காட்டுக்குள் மருது சகோதரர்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை நோக்கித்தான் நாவல் நகரும் என தெளிவான பாதையை வாசகருக்குக் கடத்துவதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதற்கான சொக்குப்பொடியை தூவிக்கொண்டே செல்வது தான் சிறப்பு.
இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரப்போர் என்றால் அது காளையார் கோவில் காட்டுக்குள் 1801ல்நடந்த போர் தான் என்கிறார். 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் மக்கள் பங்குபெறவில்லை, ஆனால் இந்தப் போரில் சிவகங்கைச் சீமையின் மொத்த மக்களும் பங்கு கொண்டனர் என்கிறார். அதற்கு ஆதாரமாக போர் முடிந்தவுடன் ஊரின் அனைத்து மக்களிடமும் இருக்கும் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, இனிமேல் எந்த புரட்சியிலும் ஈடுபடமாட்டேன் என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஒப்பந்தம் போடப்பட்டதையும் குறிப்பிடுகிறார்.
நாங்குநேரி முதல் பூனே வரை உள்ள புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து கம்பெனிக்கு எதிராக சின்னமருது போர் புரிந்த சம்பவத்தையும் அதற்கு சான்றாகச் சொல்கிறார். இந்த நிகழ்வுக்கு முன் இத்தனை பெரிய ஒருங்கிணைந்த போர் கம்பெனிக்கு எதிராக நடந்ததில்லை என்பதும் வரலாறு. அதுபோக போர்ப்பிரகடணம் ஒன்றையும் சின்ன மருது தயாரித்திருக்கிறார். அதாவது தாங்கள் எதற்காக போர் புரிகிறோம், தங்களின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக சுவரொட்டிகளின் மூலம் மக்களுக்கும் கம்பெனிக்கும் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்த நிகழ்வுகளையெல்லாம் ஆதாரங்களாகக் காட்டி இது தான் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என முரசு கொட்டுகிறார்.
வரலாறுனா வெறும் பாடபுத்தக வரலாறு மட்டுமே தெரிந்த என்னைப்போன்ற தற்குறிகளுக்கு இதன் தகவல்கள் ஒவ்வொன்றும் வைடூரியங்கள்.
1800 – 1801 ம் ஆண்டுகளுடைய நிகழ்வுகளை மட்டும் தொகுக்காமல் அந்த நிகழ்வுக்கு எதுவெல்லாம் காரணமாயிருந்தது என ஆற்காடு நாவப்பிலிருந்து துவங்கி கௌரி வல்லபர் வரை எந்த ஒரு சின்ன நிகழ்வையும் விட்டுவிடக்கூடாது என்ற ஆசிரியரின் அக்கறை ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.
ஆற்காடு நவாப், ஹைதர் அலி, திப்பு சுல்தான், பூலித்தேவன், கட்டபொம்மன், ஊமைத்துரை, வேலுநாச்சியார், ராமநாதபுரம் சேதுபதி, விருப்பாட்சி கோபால் நாயக்கர், திருவிதாங்கூர் சமஸ்தானம், துத்தாஜி வாக் என நாவலில் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் வரலாறையும் கொண்டுவந்து மருதுபாண்டியர்களின் வாழ்க்கையோடு இணைக்கிறார். அதுவும் காவல் கோட்டம் படித்த கையோடு இதைப் படித்தால் அதன் நீட்சியாக இதை உணர்வீர்கள்.
காவல் கோட்டம் நாவலில் விஜயநகரப் பேரரசின் குரல்வளை எவ்வாறு நெரிக்கப்பட்டது என்பதைச் சொல்வதாகக் கொண்டால், இந்த 1801 நாவலில் நெரிக்கப்பட்ட குரல்வளையின் கடைசி சுவாசத்தை பதிவு செய்திருக்கிறது என்று கொள்ளலாம்.
இந்த நாவல்ல ஒரு வரி இப்படி வரும் கம்பெனி தன் படையில் வீரர்களை உருவாக்குவதை விட எதிரிகளின் படையில் துரோகிகளை விரைவிலேயே உருவாக்கி விடுகிறார்கள் என்று, அது எத்தனை பொருத்தமான வார்த்தை என்பதை வரலாறு இன்றுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறது. இந்த நாவலின் சில பகுதிகளோடு எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அதை புனைவு எனக் கருதி பெரிதுபடுத்தாமலும், வரலாறை முக்கியத்துவப்படுத்த எண்ணியும் சில தவறுகளையும், பிழைகளையும் சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன்.
கண்டிப்பாக தமிழர்கள் ஒவ்வொரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வரலாறு என்பதால் கட்டாயம் நாவலை வாசிக்க முயற்சி செய்யுங்கள். வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே..
#Kmkarthikeyan_2020-57