* பால்யகால சகி
* சப்தங்கள்
*எங்க உப்பாவுக்கொரு ஆணையிருந்தது
* மூணு சீட்டு விளையாட்டுக்காரனின் மகள்
* ஆனைவாரியும் பொன்குருசும்
* பாத்துமாவின் ஆடு
* மதில்கள்
* காதல் கடிதம்
மேற்றிப்பிட்ட நூல்களின் தொகுப்பே இந்நூல்.
Original price was: ₹575.00.₹560.00Current price is: ₹560.00.
வைக்கம் முகம்மது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர். தீமை, சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடு குறிப்பாகக் கோமாளிகள், மடையர்கள், திருடர்கள், குற்றவாளிகள் என்று உலகம் கணிக்கும் மனிதர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதாலும் இவ்வகையினரைத் தன்னுடைய மந்திர எழுத்தால் நாம் விரும்பும் பாத்திரங்களாக மாற்றி மலையாள இலக்கியத்தின் வரைபடத்தைப் பலபத்தாண்டுகளுக்கு முன்பே மாற்றி அமைக்க பஷீரால் முடிந்தது.
முன்னுரையில்: கே. சச்சிதானந்தன்
Delivery: Items will be delivered within 2-7 days
Amudhan Devendiran –
வைக்கம் முகமது பஷீர்
என் இலக்கிய வாசிப்பில் ரஷ்யா இலக்கியங்களுக்கும் மலையாள இலக்கியங்களுக்கும் மிகப்பெரிய இடமுண்டு. குறிப்பாக மலையாள இலக்கியத்தில் பஷீரை மிகவும் நேசித்து வாசித்திருக்கிறேன் அவரது எளிமையான எழுத்துநடை ஒவ்வொரு வாசகனையும் வசீகரிக்கும். ஒரு முறை
தோழர். ச. தமிழ்ச்செல்வன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவர்) அவரிடம் பேசும்போது எதார்த்தமான எழுத்துக்களை பஷீர் மிகவும் எள்ளி நகையாடைகிறாரே அவரைப்போன்ற எழுதுபவர்கள் தமிழ் இலக்கியத்தில் இல்லையா என்று கேட்டிருக்கிறேன். (இதற்கு முன் இதையும் பதிவு செய்திருக்கிறேன்)
பஷீரைப் போல எழுதுபவர்கள் மிகவும் குறைவானவர்களே தன் வாழ்விலிருந்து எழுத்துக்களை உருவி
இலக்கியம் படைப்பவர்கள் ஒரு சிலரே. அவரது ‘இளம் பருவத்து தோழி’ என்ற நாவலைப் படித்து பலமுறை எனக்குள் நானே அழுதிருக்கிறேன், சிரித்திருக்கிறேன்,கொண்டாடியிருக்கிறேன்காதல் கதைகள் ஒரு சிலவே மனதில் பதிந்துவிடும் அதில் தஸ்தாயெவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ மௌனியின் ‘அழியாச்சுடர்’ மாக்சிம் கார்க்கியின் ‘மீளாத காதல்’ அந்த வரிசையில் பஷீரின் ‘இளம் பருவத்து தோழி’ என சொல்லலாம்.
கேரளாவில் ஒரு ஆட்டோ தொழிலாளியை கேட்டால்கூட பஷீர் என்ற எழுத்தாளரை தெரிந்து வைத்துக்கொண்டு ‘நம்ம பஷீரா’வாங்க போலாம் என்ற அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமான எழுத்தாளர். (கேரளாவில் எழுத்தாளர்களுக்கு என்று ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு)
அவரது படைப்புகளான ‘மதில்கள்’ ‘பாத்துமாவின் ஆடு’ ‘உலகப்புகழ்பெற்ற மூக்கு’ ‘எங்க உப்பப்பாவுக்கு ஒரு ஆனையிருந்தது’ போன்ற கதைகளை அவசியம் வாசிக்க வேண்டும்.
பஷீரின் எளிமையான தோற்றத்தை போலவே அவரது எழுத்துக்களும் எளிமையானவை. மலையாள இலக்கியத்தில் அவருக்கென தனியான இடம் உண்டு அது இந்திய அளவிலும் கூட. எழுத்தாளர்களை, கலைஞர்களை கொண்டாடாத ஒரு சமூகம் நம் தமிழ் சமூகம் மட்டுமே. (சினிமா நடிகர் – நடிகைகளை தவிர்த்து) தற்கால தமிழ் சமூகத்தில் வாசிப்பும், எழுத்தாளர்களை, கலைஞர்களை, படைப்பாளிகளை கொண்டாடும் மனநிலை மாறியிருக்கிறதா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
வைக்கம் முகமது பஷீர், 1908 -ம் ஆண்டு ஜனவரி 10-ம் நாள் கேரளாவில் உள்ள வைக்கமில் ‘தலயோலப் பரம்பில்’ பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை முடிப்பதற்கு முன்பே வீட்டை விட்டு ஓடிவிட்டவர், இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார். பலமுறை சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் இடதுசாரி கட்சிகளிலும் வேலை செய்திருக்கிறார்.
காலம் கடந்து தன் கதைகளின் மூலம் உயர்ந்து நிற்கிறார் பஷீர் என்ற ஆளுமை.
இறுதியாக, பஷீரின் வார்த்தைகளில் இருந்து..
“பேனாவின் முனையிலிருந்து அன்று நெருப்பு மழை பெய்து கொண்டிருந்தது. சூறாவளி வீசிக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் இலக்கு சம்ஹாரம் செய்வதாக இருந்தது. இந்த லட்சியத்துடன் ஒன்று சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்தனர். அன்று எங்களுக்கு ஒரு பத்திரிகை யும்… நான்தான் பத்திரிகையின் ஆசிரியர்.
நெருப்புப் பெட்டியைப் போன்று இருந்த சிறிய ஒரு அறைதான் பத்திரிகை அலுவலகம்.
தங்கியிருந்ததும் அங்கேதான். இரவும் பகலும் சிந்தனைதான். எழுத்துதான். இரவும் பகலும் கலந்துரையாடல்கள்… இரவும் பகலும் செயல்பாடுகள்…
என்னுடைய வார்த்தைதான் வேத வார்த்தை… நான் மிகவும் நல்ல மனிதன். மறுக்க முடியாத தலைவன். எனினும், இதயத்திற்குப் பெரிய எரிச்சல். ஒரு அழுகை. சிறிய அளவில் கவலையும் இருந்தது.
பயங்கரவாத செயல்களுக்கு இவை எதுவும் பொருத்தமானவை அல்ல. எனினும், கவலைகள் நிறைந்த பாடல்களைப் பாட வேண்டும் என்று தோன்றும்.
இரண்டு வகைப்பட்ட உணர்ச் சிகள் மனதில். இரண்டும் போராடிக் கொண்டிருக்கின்றன. மொத்தத் தில்- ஒரு மூச்சு அடைப்பதைப் போல”.