3 reviews for BOX கதைப் புத்தகம்
Add a review
You must be logged in to post a review.
₹290.00
முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி பாக்ஸ்.
யுத்தத்தின் ஊடும் பாவுமான கதைகளைச் சித்திரிக்கும் உபவரலாறு.
Delivery: Items will be delivered within 2-7 days
Selva kumar –
Vali niraintha puthagam
MAYA –
திரைப்படம் பார்ப்பது போல் இருந்தது.. மீளாத்துயரத்தோடு வாசித்தேன்.
Kathir Rath –
BoX
எழுத்தாளர் பா.ராகவன் தனது புத்தகம் ஒன்றில் பயணங்களின் போது வாசிக்க உகந்ததாக மொழிப்பெயர்ப்பு நூல்களை குறிப்பிட்டுருந்தார். ஜன்னலோர இருக்கையில் மாறிக்கொண்டே வரும் காட்சிகளோடு வேறு நிலம் சார்ந்த வாசிப்பே பொருத்தமானது என அவர் குறிப்பிட்டது என்னை வெகுவாக கவர்ந்திருந்த்து.
கடந்த வாரம் அப்படி ஒரு பயணத்தில் வாசிக்க தேடி பார்த்ததில் வேறு நிலம் சார்ந்த புத்தகமாக என் வசம் இருந்த்து இந்த புத்தகம்தான்.
இதனை கட்டாயம் வாசிக்க வேண்டுமென நாஞ்சில் நாடன் ஒரு நிகழ்வில் குறிப்பிடவே வாங்கி வைத்திருந்தேன். கொடுமை என்னவென்றால் அந்நிகழ்வில் ஷோபாசக்தியும் வந்து பேசினார். எனக்கு அப்போது அவரை தெரிந்திருக்கவில்லை, அவர் பேசியதை கேட்ட பிறகு அங்கு வந்திருந்த கவிஞர் தனாசக்தியிடம் கேட்டுத்தான் அவர் புலிகள் குறித்து வேறு பார்வை கொண்டவர் என தெரிய வந்தது.
அதன் பிறகு சமீபத்தில் வாசித்த #ஒரு_கூர்வாளின்_நிழலில் புத்தகம் எனக்கு தமிழீழ போராட்டம் பற்றி ஓரளவு தெளிவான அறிமுகத்தை தந்தது, உண்மையில் அதற்கு பிறகுதான் ஷோபாசக்தியை வாசிக்கவே மனம் வந்தது.
இந்த புத்தகம் வன்னி நிலப்பகுதியில் உள்ள பெரியபள்ளன்குளம் என்ற ஊர் பற்றிய கதையை கூறுகிறது. 2009 போரின் போதும் அதற்கு பிறகுமான அப்பகுதி மக்களின் வாழ்வை விவரிக்கிறது.
அவ்வளவு எளிதாக இக்கதையினுள் நுழைய இயலவில்லை. விடியற்காலை 5 மணிக்கு சில்லிட்டிருக்கும் நீரில் குளிப்பதற்கு எவ்வளவு தயங்குவோம்? உடைகளை களைந்த பிறகும் கையில் நீரை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அதன் குளிர்ந்த தன்மையை பரிசோதித்து, கைக்கு மட்டும் ஊற்றி, பின் வேகமாக உடலில் ஊற்றி, அந்த குளிர் அடங்குவதற்குள் வேகவேகமாக நீரை ஊற்றிக் கொள்ளும் அனுபவத்தை ஒத்திருந்தது.
ஒரு கட்டத்திற்கு பிறகு தண்ணீரை ஊற்றிக் கொள்ளாவிட்டால்தான் குளிரடிக்கும். அப்படித்தான் இந்த நாவலும், முதலில் இலங்கைத் தமிழ் கலந்து வன்முறையோடு துவங்கிய கதைக்குள் நுழைவது சிரமமாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு கீழே வைக்க முடியவில்லை.
இப்படி ஒரு கிராமத்திற்குள் ஒரு வாய்பேச இயலாத பையன் வந்து போனான் என்று வந்த மின்னஞ்சலை வைத்து ஒரு நாவலே எழுதுவது ஆச்சர்யம் தரும் விசயம்தான்.
அதுவும் நோலன் படங்களில் வருவது போல முதல் காட்சி எதற்கென்றே புரியாமல் இருந்து, இறுதியாக கதை முடிவில் முதல் காட்சிக்கான காரணம் புரிவது நன்றாக இருந்த்து.
நாமெல்லாம் வாழ்வது எத்தனை ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்பது ஈழம் சார்ந்த கதைகளை படிக்கையில்தான் உணர முடிகிறது, இதோ இங்கே இருக்கும் இலங்கைதான், நம் மொழி பேசும் மக்களின் வாழ்வு யுத்தத்தாலும் அதனால் அழிந்த மானுடத்தாலும் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.
யுத்தத்தை பற்றி அதிகம் பேசவில்லை, அதற்கு பிறகான வாழ்க்கையைத்தான் சொல்கிறது, போரில் இறநதவன் எவ்வளவு கொடுத்து வைத்தவன் என்பது உயிரோடு இருப்பவனுக்குத்தான் தெரியும்.
அதிலும் ஊரில் ஊனமில்லாதவர்களே இல்லை என்ற வகையில் பாதிக்கப்பட்டோரின் வாழ்வு கொடுமை.
இவற்றிற்கு நடுவிலும் சாதிக் கொடுமை, உண்மையில் எனக்கு இலங்கையில் தமிழ்நாடு அளவிற்கு சாதிப் பிரவினைகள் இருப்பது தெரியாத ஒன்று. மேலும் பண்டார வன்னியன் பற்றி இந்த புத்தகத்தில்தான் முதல் முதலில் படிக்கறேன். இதற்கு முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கு என்றால் ஒரு சாதிக்கட்சி பேனரில்….
கார்த்திகையாக வரும் அந்த சிறுவன் எழுப்பும் ப.ப.ப.ப.ப ஒலியை படிக்கும் போதே ஏதோ செய்கிறது. அவனுக்கு ஊரே பாக்ஸ் அடித்தலையும் ஊரின் முதல் போராளியான கார்த்திகை கொல்லப்படுவதை நடித்துக் காட்டுவதும்தான் இந்நாவலின் ஆன்மாவாக உணர்கிறேன்.
அதிலும் “சகோதரம்” என்ற சொல்லாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்த்து.
இவற்றையெல்லாம் படித்து யுத்தத்தின் கொடுரத்தை தெரிந்து கொள்ளும் நேரத்தில் இங்கு தமிழகத்தில் பிரவீன் காந்த் என்றொரு இயக்குனர் எடுத்த படத்தின் டிரெய்லர் நினைவுக்கு வந்து தொலைக்கிறது, சீமானை விட மோசமான மனிதன் போல…
ஊரில் நடக்கும் கதை, அது குறித்து எழுத்தாளருக்கு வரும் தகவல், எழுத்தாளரின் நினைவுக் குறிப்புகள், அந்த ஊர் மக்கள் பார்வையில் சொல்லப்படும் கதைகள்,நிகழ்கால கதை என நூல் பிடித்தாற்போல எங்கோ ஆரம்பிக்கும் கதை எங்கெங்கோ சென்று ஆரம்பித்த இடத்திலேயே வந்து முடிகிறது.
சுரா, சாரு போன்று ஷோபாவும் தனிப்பாணியில் கதை சொல்கிறார். உண்மையில் நன்றாய் இருக்கிறது.
இந்த புத்தகத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என தெரிந்துக் கொள்ள இணையத்தில் தேடினால் தமிழச்சி தொடர்பான விவகாரம் கண்ணில் பட்டது. இதெல்லாம் எதுவுமே தெரியாமல் இணையத்தில் இருந்திருக்கிறேன்.
ஆயுதத்தை கையில் எடுத்து அப்பாவிகளை குறி பார்த்த வகையில் புலிகளும் ராணுவமும் வெகுஜன மக்களுக்கு எதிரே திரும்பி விட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.
உண்மையில் அந்த சிறுவனின் பின்னனி இப்படி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
“ஒரு நல்ல துறவியால் எப்போதும் முழு துறவியாக இருக்க முடியாது”
வித்தியாசமான வாசிப்பனுபவத்திற்கு கட்டாயம் உறுதியளிக்க முடியும். வாசியுங்கள். நான் ஷோபாவின் மற்ற இரு நாவல்களையும் வாசிக்க விரும்புகிறேன்.