1 review for சிதம்பர நினைவுகள்
Add a review
You must be logged in to post a review.
₹200.00
மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது உறுதி. தாஸ்தாவஸ்ங்கியைப் போல் கொண்டாடப்பட வேண்டியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.
Delivery: Items will be delivered within 2-7 days
சீ.ப்பி. செல்வம் –
#சிதம்பர_நினைவுகள்…
முதலில் #வம்சி_புக்ஸின் பதிப்பாளரும் #சிதம்பர_ஸ்மரண என்ற மலையாளப் புத்தகத்தினை தமிழில் தவழவிட்ட #மொழிபெயர்ப்பாளர் #கே_வி_ஷைலஜா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்து பூச்செண்டுகளோடு பாராட்டுக்களும் நல் வணக்கங்களும்…
ஓர் அச்சு அசலான மனிதனை ஒரு புத்தகம் கொண்டு வந்து சேர்க்கும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கூட பொய்த்துப் போகாமல் செய்துவிடும் ஒரு மகத்தான நூல்தான் #சிதம்பர_நினைவுகள். மலையாளத்தில் தன்னுடைய தனித்துவமான கவிதைகள் மூலம் கொடிகட்டி பறக்கும் #பாலசந்திரன்_சுள்ளிக்காடு அவர்களின் வாழ்னுபவ கட்டுரைகளை #மலையாளத்திலிருந்து, மொழிபெயர்ப்பாளர் #கே_வி_ஷைலஜா அவர்கள் #தமிழில் மாற்றி இருக்கிறார். படிப்பதற்கு சிரமம் இல்லாத எழுத்து நடையும், மலையாளத்தில் இருந்து தமிழ்மொழியில் மாற்றம் செய்யப்பட்டதற்கான எந்த ஒரு தடமும் தெரியாத மொழிபெயர்ப்பு கலையும் வியப்பை அளிக்கிறது. தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை மனிதத் தன்மையோடு எந்தவித ஏற்ற இறக்கமும், ஒளிவு மறைவின்றி நான்தான் #பாலசந்திரன்_சுள்ளிக்காடு என்று சொல்லும் நேர்மை இருக்கிறதே அதுதான் ஒரு படைப்பாளியின் உண்மையான முகம்.
தான் சந்தித்த மனிதர்களை, தன்னோடு சேர்ந்து வந்த துயரங்களை, தன்னால் செய்யப்பட்ட உதவிகளை, தான் மட்டுமே அறிந்துகொண்ட பசியினை, பல இடங்களில் தன் குற்ற உணர்வுக்கு ஆளாக்கப்பட்ட காதலை, இப்படி இன்னும் இன்னும் பல நிகழ்வுகளை தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு திரிந்த ஒரு எளிய மனிதனை இந்த புத்தகம் ஒவ்வொரு கட்டுரையிலும் நமக்கு அடையாளப்படுத்தி விட்டு செல்கிறது நண்பர்களே.
எந்த இடத்திலும் நான் ஒரு மிகச் சிறந்த கவிஞன், மிகச் சிறந்த படைப்பாளன் என்று தன்னை உயர்த்திப் பிடித்துக் கொள்ளாத, தன்னை மட்டுமே கடந்து சென்ற நினைவுகளை வைத்துக்கொண்டு நான் ஒரு சராசரி மனிதன் என்பதை மட்டும் தான் இந்த புத்தகத்தின் வாயிலாக திரும்ப திரும்ப நமக்கு சொல்லி இருக்கிறார் பாலசந்திரன் சுள்ளிக்காடு அவர்கள். ஒரு படைப்பாளியின் வாழ்க்கையில் இவ்வளவு துயரங்களும் துன்பங்களும் நிரம்பிய வண்ணம் இருக்கிறதா? என்பதனை நாம் வாசிக்கும் போதும், வாசித்து முடித்து விட்டு ஒரு கணம் அவரை நேசிக்கும் போதும் அவருடைய இரு கரங்களை சேர்த்துக் கொண்டு அவரை அப்படியே அணைத்துக் கொள்ள மனம் ஏங்குகிறது நண்பர்களே. நிச்சயமாக வாசியுங்கள் ஒரு படைப்பாளி தன்னுடைய வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறார்.
மீண்டும் ஒருமுறை, இந்த புத்தகத்தை தமிழில் கொண்டு வந்து எல்லோர் கரங்களிலும் தவழுவதற்கு நல்வாய்ப்பு தந்த #வம்சி_புக்ஸின் பதிப்பாளர், பல நூலுக்கு சொந்தக்காரர், மொழிபெயர்ப்பாளர் #கே_வி_ஷைலஜா அவர்களுக்கு என் நன்றியும் வணக்கங்களும்…
நூலின் பெயர்: சிதம்பர நினைவுகள்
ஆசிரியர்: மலையாள மூலம் பாலசந்திரன் சுள்ளிக்காடு
தமிழில்: கே.வி.ஷைலஜா
வெளியீடு: வம்சி புக்ஸ்