Chikkalaana Nurkandu
துப்பறியும் கதை என்றாலே ‘ஷெர்லக் ஹோம்ஸ்’ தான் நமக்கு நினைவுக்கு வரும். இந்தக் கதாபாத்திரம் அறிமுகமான நாவல்தான் A Study in Scarlet என்ற சர் ஆர்தர் இக்னேஷியஸ் கோனான்டைல் எழுதிய நாவல். அதுவே அவரது முதல் துப்பறியும் கதை. இந்த நாவலுக்கு அவர் வைத்த முதல் பெயர் A Tangled Skein’. இந்த நாவல் முதலில் ‘பீட்டன்ஸ் கிறிஸ்மஸ் ஆண்டு இதழ்’ என்ற இதழிலும் பிறகு 1888இல் நூலாகவும் வெளிவந்தது. துப்பறியும் நாவலில் பூதக்கண்ணாடி இடம்பெற்றதும் இந்த நாவலில் தான். இந்த நாவலே ‘சிக்கலான நூற்கண்டு’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சந்தியா பதிப்பகம் மூலம் வெளிவருகிறது.
இலக்கிய உலகில் இரண்டு மருத்துவர்கள் எழுத்தாளர்களாகி உலகப் புகழ்பெற்றார்கள். ஒருவர் ரஷ்யாவின் ஆண்டன் செகாவ்; சிறுகதைகளாலும் நாடகங்களாலும் அறியப்பட்டவர். இன்னொருவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கோனான்டைல்; துப்பறியும் இலக்கியத்தின் முன்னோடி.
Reviews
There are no reviews yet.